இளைஞர்களின் இதயராணி சமந்தாவுக்கு இன்று பிறந்தநாள்… இணையத்தில் குவியும் வாழ்த்து !

சென்னை : தென்னிந்தியாவின் கனவு கன்னி, இளைஞர்களின் இதய ராணி, க்யூட் நடிகை என அனைவரும் செல்லமாகக் கொஞ்சும் நடிகை சமந்தா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடிவருகிறார்

Recommended Video

பெண் AUTO Driver Kavithaவிற்கு விலையுயர்ந்த காரை Gift ஆக கொடுத்த Samantha | SamJam | Filmibeat Tamil

தமிழ், தெலுங்குத் திரையுலகில் அறிமுகமான நாள் முதல் இன்று வரை முன்னணி நட்சத்திரமாக உள்ளார் நடிகை சமந்தா.

அவருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள்,நண்பர்கள் என அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இவரது பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகி உள்ள காமன் டிவி அனைவரின் வாட்ஸ்அப் ஸ்டேடசாக உள்ளது.

சென்னை பெண்ணு

சென்னை பெண்ணு

நடிகை சமந்தாவின் உண்மையான பெயர் யாசோதாவாகும். இவர், பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னை பல்லாவரத்தில் தான். இவர் தி நகரில் உள்ள ஒரு ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் தனத பள்ளிப்படிப்பை முடித்தார். இதையடுத்து, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். படிக்கும் போதே இவர் சில விளம்பர படங்களில் நடித்துள்ளார்.

நற்பெயரை எடுத்தார்

நற்பெயரை எடுத்தார்

தன்னை தமிழ் பெண் என்றே அடையாளப்படுத்திக் கொண்ட சமந்தா, தமிழில் மறக்கமுடியாத காதல் திரைப்படமான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார். இதன் தெலுங்கு ரீமேக்கில் சமந்தா நடித்தார். இப்படம் ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளிலும் வெளியானது. தமிழில் த்ரிஷா நடித்த ஜெஸ்ஸி கதாபாத்திரத்தில் தெலுங்கில் சமந்தா நடித்தார். இப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.

கலக்கு கலக்கினார்

கலக்கு கலக்கினார்

இவர் ஜூனியர் என்.டி.ஆருடன் பிருந்தாவனம், மகேஸ்பாபுவுடன் தூகுடு, ராஜமௌலியின் ஈகா ஆகிய படங்களில் நடித்து தெலுங்கு திரைத்துறையில் ஒரு கலக்கு கலக்கினார். ஈகா திரைப்படம் தமிழில் நான் ஈ என்று வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

காதல் திருமணம்

காதல் திருமணம்

அசாத்தியமான நடிப்பு, அசால்ட்டான நடிப்பு திறமை என இன்று வரை தனது ரசிகர்களை நிலை நிறுத்தி வருகிறார். இவர், பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவின் மகன் நாக சைததன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பு நடிக்க மாட்டார் என கூறப்பட்ட நிலையில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

மனதில் இடம்பிடித்தார்

மனதில் இடம்பிடித்தார்

விஜய், தனுஷ். விக்ரம், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகை என்று பெயர் எடுத்துள்ளார். விஜய்யுடன் இவர் நடித்த, தெறி, மெர்சல், கத்தி படக்கள் வெற்றி பெற்று இவருக்கு திறமையான நடிகை என பெயரை பெற்றுத்தந்து. இவர் விக்ரமுடன் 10 எண்றதுக்குள்ள படத்தில் க்யூட் ரியாக்ஷன்ஸ் காட்டி அனைவர் மனதிலும் இடம் பிடித்தார். தங்கமகன் படத்தில் தனுஷின் மனைவியாக குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி மனங்களை வென்றார்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

நடிகை சமந்தா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைப்பிரபலங்கள் மட்டுமின்றி ரசிகர்கள் அவரது நண்பர்கள் என பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். சமூகவலைத்தளங்களிலும் ரசிகர்கள் காமன் டிபியை வெளியிட்டு வாழ்த்துக்களை கூறி தெறிக்கவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X