For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  மீண்டும் சோஷியல் மீடியா பக்கம் தலை காட்டிய சமந்தா.. ஆனால் ரசிகர்களுக்கு திருப்தி இல்லை!

  |

  சென்னை: நடிகை சமந்தா கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக சோஷியல் மீடியா பக்கம் தலை காட்டாமல் இருந்த நிலையில், இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

  Celebrity Quarantine pets | Dhruv | Priya Atlee |Yashika

  தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர்.

  ஆனால், இந்த லாக் டவுன் நேரத்தில் சமந்தா ஆளே காணாமல் போயிருப்பது, ரசிகர்கள் மத்தியில் பல வதந்திகளுக்கு இடமளித்து வருகிறது.

  லாரன்ஸ்.. அஜித்தை தொடர்ந்து அள்ளிக்கொடுத்த விஜய்.. கொரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ.1.30 கோடி அறிவிப்பு!லாரன்ஸ்.. அஜித்தை தொடர்ந்து அள்ளிக்கொடுத்த விஜய்.. கொரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ.1.30 கோடி அறிவிப்பு!

  கர்ப்பமாக

  கர்ப்பமாக

  தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவை திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தா, கர்ப்பமாக இருக்கிறார் என்ற வதந்தி சில மாதங்களாக பரவி வருகின்றன. அதற்கு ஏற்றவாறு நடிகை சமந்தாவும், சோஷியல் மீடியாவில் இருந்து ஒதுங்கி இருப்பது அதனை மேலும், உறுதி செய்யும் விதமாகவே அமைந்துள்ளது என சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.

  மறுப்பு

  மறுப்பு

  விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் உருவாக இருந்த காத்துவாக்குல இரண்டு காதல் படத்தில் இருந்து நடிகை சமந்தா விலகிய நிலையில், அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்ற செய்திகள் வைரலாக பரவின. ஆனால், அதனை திட்டவட்டமாக நடிகை சமந்தா மறுத்திருந்தார். அப்படி இருந்தால், தானே அறிவிப்பதாகவும் கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.

  காணவில்லை

  காணவில்லை

  கடந்த மாதம் 24ம் தேதி கடைசியாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செல்ல நாய்க்குட்டியான ஹாஷ் உடன் நாக சைத்தன்யா படுத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார் சமந்தா. அதன் பிறகு, சமூக வலைதளத்தில் எந்தவொரு கருத்துக்களையும், புகைப்படங்களையும் பதிவிடாமல் சில காலம் அமைதியாக இருந்தார்.

  நீண்ட தூக்கம்

  நீண்ட தூக்கம்

  இந்நிலையில், தனது செல்ல நாய்க்குட்டி ஹாஷ் உடன் படுத்திருக்கும் புகைப்படத்தை நடிகை சமந்தா இன்று வெளியிட்டு வைரலாக்கி உள்ளார். மேலும், அதற்கு கேப்ஷனாக நீண்ட தூக்கத்தில் இருந்து மீள்கிறேன் என பதிவிட்டுள்ளார். இத்தனை காலம் சமூக வலைதளத்தில் தலையை காட்டாமல் இருந்ததற்கு விடை அளிக்கும் விதமாக இதனை பதிவிட்டுள்ளார்.

  ரசிகர்கள் வருத்தம்

  ரசிகர்கள் வருத்தம்

  கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்தப் பிறகும் நடிகை சமந்தாவின் முகத்தை இந்த புதிய புகைப்படத்தில் காண முடியவில்லையே என அவரது ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். ஒரு வழியாக நீண்ட தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டேன் என சமந்தா பதிவிட்டு இருக்கும் நிலையில், இனிமே தொடர்ந்து, அடுத்தடுத்த புகைப்படங்கள் வெளியாகும், சமந்தாவின் தரிசனம் ரசிகர்களுக்கு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

  கொரோனா நிதி

  கொரோனா நிதி

  கொரோனா நிவாரண நிதி வழங்குவதில் டோலிவுட் நடிகர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்தை காட்டியது நாடே அறிந்த விஷயம். சமந்தாவின் கணவரும் நடிகருமான நாக சைத்தன்யா 25 லட்சம் நிதியை தெலுங்கு சினிமா தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், நடிகை சமந்தா தனியாக நிதி ஏதும் கொடுத்ததாக அறிவிப்புகள் ஏதும் வெளியாகவில்லை.

  கைவசம்

  கைவசம்

  விக்னேஷ் சிவன் படத்தில் இருந்து வெளியேறிய சமந்தா, மாயா, கேம் ஓவர் படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கத்தில் உருவாக உள்ள ஹாரர் திரில்லர் படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார். மேலும், பெங்களூரை சேர்ந்த போராளியும் பாடகியுமான நாகரத்னம்மா வாழ்க்கை வரலாறு படத்திலும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தி ஃபேமிலி மேன் 2 வெப்சீரிஸில் வில்லியாக நடித்துள்ளார். விரைவில் அந்த வெப்சீரிஸ் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  English summary
  Samantha Akkeneni has been missing in action on Instagram for over a month now. She made her social media comeback with a photo of her puppy, Hash.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X