சமூக வலைதள சீண்டல்கள் ரொம்ப அச்சுறுத்தலா இருக்கு.. அதை சமாளிப்பது கஷ்டம் தான்.. சமந்தா ஓப்பன் டாக்!
சென்னை: நடிகை சமந்தா சமூக வலைதள சீண்டல்கள் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஓப்பனாக பேசியுள்ளார்.
சமீபத்தில் சமந்தா நடிப்பில் வெளியான தி ஃபேமிலி மேன் 2 படத்திற்காக இதற்கு முன் இல்லாத அளவுக்கு பாராட்டுக்களையும் கடும் விமர்சனங்களையும் சமந்தா பெற்றிருந்தார்.
சமூக வலைதள சீண்டல்களை எப்படி கையாள்வது என்பது குறித்து சமந்தா பேசியிருப்பது வைரலாகி வருகிறது.

சீண்டல்கள்
நடிகை சமந்தா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சமூக வலைதள சீண்டல்கள் குறித்து அளித்துள்ள பதில் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தி ஃபேமிலி மேன் 2 வெப்சீரிஸில் நடித்ததற்காக நடிகை சமந்தாவிற்கு பாராட்டுக்களும் கண்டனங்களும் சம அளவில் குவிந்தன.

ஆபாசமான கமெண்ட்டுகள்
நடிகை சமந்தா நடித்த கதாபாத்திரம் குறித்து விமர்சிப்பதை தாண்டி அவரது குடும்ப வாழ்க்கையை கொச்சைப் படுத்தும் ரீதியிலான ஏகப்பட்ட ஆபாசமான கமெண்ட்டுகள் அவரது ட்வீட்கள் மற்றும் இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுகளுக்கு கீழே அதிகளவில் குவிந்தன.

ரொம்ப கஷ்டம்
சமீபத்தில் நடிகை சமந்தா அளித்த பேட்டியில், சோஷியல் மீடியா சீண்டல்களை எதிர்கொள்வது என்பது சாதாரண விஷயம் அல்ல, அது ரொம்பவே கஷ்டம். நெட்டிசன்கள் ஏதோ சொல்வதை சொல்லிவிட்டு போகட்டும் என்றும் அந்த விஷயத்தில் சும்மாவும் இருக்க முடியாது. பர்சனலா அட்டாக் செய்யும் போது ரொம்பவே வலிக்கத்தான் செய்யும் என்றும் கூறியுள்ளார்.

மனப்பக்குவம்
பல ஆண்டுகளாக சினிமா துறையில் இருப்பதால், எந்தவொரு சோதனையான காலத்தையும் கடந்து சென்று விட முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு நிறையவே இருக்கிறது. அந்த மனப்பக்குவத்தால் தான் சமூக வலைதள சீண்டல்களை இதுவரை நான் சமாளித்து வருகிறேன். சில சமயம் அதற்கு எதிரான கண்டனங்களையும் அதற்கு தேவையான நடவடிக்கைகளையும் நான் எடுத்து வருகிறேன் எனக் கூறியுள்ளார்.

நயன்தாரா உடன்
தி ஃபேமிலி மேன் 2 வெப்தொடரை தொடர்ந்து நெட்பிளிக்ஸிலும் நடிகை சமந்தாவுக்கு நடிக்க வாய்ப்புகள் வந்ததாகவும் ஆனால், அதை அவர் தவிர்த்து விட்டதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. சகுந்தலம் எனும் தெலுங்கு படத்திலும் நயன்தாரா, விஜய்சேதுபதி உடன் இணைந்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திலும் நடித்து வருகிறார் சமந்தா.


Click it and Unblock the Notifications











