ராணா – மிஹீகா நிச்சயதார்த்தம்.. மிஸ் பண்ணாம கலந்து கொண்ட பிரபல நடிகை.. வைரலாகும் புகைப்படங்கள்!

ஹைதராபாத்: ராணா டகுபதி - மிஹீகா பஜாஜ் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பிரபல நடிகை தனது கணவருடன் கலந்து கொண்டுள்ளார்.

Recommended Video

Rana Daggubati Engaged with Miheeka Bajaj - Official

பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளரான சுரேஷ் பாபுவுக்கு மகனாக சென்னையில் பிறந்தவர் நடிகர் ராணா.

2010ம் ஆண்டு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் வெளியான லீடர் படத்தின் மூலம் அறிமுகமான இவர், முதல் படத்திலேயே பல விருதுகளை அள்ளிக் குவித்தார்.

மூன்று மொழிகள்

மூன்று மொழிகள்

தெலுங்கில் அறிமுகமான நடிகர் ராணா, அடுத்த ஆண்டே பாலிவுட்டில் வெளியான தம் மாரே தம் படத்தில் நடித்து அசத்தினார். டிபார்ட்மென்ட், ஹே ஜவானி ஹை திவானி உள்ளிட்ட இந்தி படத்தில் நடித்து வந்த ராணா, ஆரம்பம் படத்தில் தல அஜித்தின் நண்பராக நடித்து கோலிவுட்டில் காலடி வைத்தார்.

காட்டுக்கு காவலன்

காட்டுக்கு காவலன்

பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு நடிகர் ராணாவின் புகழ் உலகம் முழுவதும் பிரபலமடைந்தது. இந்நிலையில், தமிழ், தெலுங்கு, இந்தி என 6 மொழிகளில் அவர் நடிப்பில் காடன் படம் உருவாகி வருகிறது. பிரபு சாலமன் இயக்கியுள்ள இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் விஷ்ணு விஷாலும் நடித்துள்ளார்.

நிச்சயம் பண்ணியாச்சு

நிச்சயம் பண்ணியாச்சு

வழக்கமாக நடிகைகள் தான் தொழிலதிபர்களை திருமணம் செய்வார்கள், இந்நிலையில், வழக்கத்துக்கு மாறாக நடிகர் ராணா டகுபதி பெண் தொழிலதிபரான மிஹீகா பஜாஜை காதலித்து திருமணம் செய்யவுள்ளார். நேற்று குடும்பத்தார் முன்னிலையில் சிம்பிளாக அவர்களது நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

கணவருடன் பங்கேற்பு

கணவருடன் பங்கேற்பு

ராணா டகுபதியின் மச்சான் தான் நடிகர் நாக சைதன்யா. நேற்று சிம்பிளாக நடைபெற்ற நிச்சயதார்த்த விழாவில் நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா ஜோடி கலந்து கொண்டனர். தற்போது அந்த புகைப்படங்களை நடிகை சமந்தா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வைரலாக்கி உள்ளார்.

சூப்பர் ஜோடி

சூப்பர் ஜோடி

ராணா - மிஹீகா நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமந்தா - நாக சைதன்யா ஜோடியை பார்த்த ரசிகர்கள், சூப்பர் ஜோடி என கமெண்ட் செய்து வருகின்றனர். ஃபார்மல் டிரெஸ்ஸில் நாக சைதன்யாவும், மஞ்சள் நிற ஸ்லீவ் லெஸ் சுடிதாரில் நடிகை சமந்தாவும் அழகாக போஸ் கொடுத்து இருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X