'2017-ல் இருந்தே கர்ப்பமா இருக்கேன்.. ஆனா..? அப்படி கேட்ட ரசிகர், இப்படி பதில் சொன்ன சமந்தா!
சென்னை: கர்ப்பமாக இருக்கிறீர்களா? என்று கேட்ட ரசிகருக்கு நடிகை சமந்தா அசத்தலாக பதில் கூறியுள்ளார்.
Recommended Video
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கிறார் நடிகை சமந்தா. வெப்சீரிஸிலும் நடித்து வருகிறார்.
தமிழில், பாணா காத்தாடி, நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம், அஞ்சான், கத்தி, தங்கமகன், தெறி, சீமராஜா, சூப்பர் டீலக்ஸ் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

நாக சைதன்யா
இப்போது, விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நயன்தாராவுடன் நடிக்க இருக்கிறார். அஸ்வின் சரவணன் இயக்கும் படத்திலும் நடிக்க இருக்கிறார். தெலுங்கு ஹீரோ நாக சைதன்யாவை காதலித்து வந்த சமந்தா அவரை கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின்னர் ஐதராபாத்தில் வசித்து வருகிறார்.

விளம்பர ஷூட்டிங்
திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார். லாக்டவுன் காரணமாக சினிமா படப்பிடிப்புகள் கடந்த 5 மாதங்களாக தடை பட்டுள்ளன. தியேட்டர்களும் திறக்கப்படவில்லை. சில மாநிலங்களில் லாக்டவுனில் தளர்வுகள் செய்யப்பட்டதை அடுத்து ஒரு சில படங்களின் படப்பிடிப்புகள் தொடங்கியுள்ளன. இந்நிலையில், கடந்த ஆறு மாதமாக வீட்டில் இருந்த நடிகை சமந்தா கடந்த சில நாட்களுக்கு முன் விளம்பர பட ஷூட்டிங்கில் பங்கேற்றார்.

மாடி தோட்டம்
லாக்டவுனால் வீட்டில் இருக்கும் சமந்தா, ஐதராபாத்தில் உள்ள தனது வீட்டில் மாடி தோட்டம் அமைத்து பயிர்களை விளைவித்து வருகிறார். அதில் விளைவித்த கேரட்டை கையில் வைத்தபடி இருக்கும் போட்டோவை பகிர்ந்திருந்தார். அதில் இந்த வாரம் முழுவதும் எங்கள் வீட்டில் கேரட் இட்லி, கேரட் சமோசா, கேரட் ஜூஸ், கேரட் பச்சடி, கேரட் பக்கோடா, கேரட் அல்வா, கேரட் பிரை போன்றவைதான் உணவு என்று கூறியிருந்தார்.

கர்ப்பமா இருக்கீங்களா?
இந்நிலையில், ரசிகர்களின் கேள்விகளுக்கு சமூக வலைதளத்தில் நேற்று பதில் அளித்தார் சமந்தா. அப்போது ரசிகர் ஒருவர், 'நீங்க கர்ப்பமாக இருக்கிறீர்களா? என்று கேட்டார். இதற்கு பதிலளித்த சமந்தா, நான் 2017 ஆம் ஆண்டில் இருந்து நான் கர்ப்பமாகத்தான் இருக்கிறேன். ஆனால், குழந்தைக்கு வெளியே வர விருப்பமில்லை என நினைக்கிறேன் என ஜாலியாக பதிலளித்துள்ளார்.

அனுஷ்கா சர்மா
கடந்த சில நாட்களுக்கு முன் நடிகை அனுஷ்கா சர்மா-விராத் கோலி தம்பத்இ கர்ப்பமாக இருப்பதை அறிவித்திருந்தனர். அதற்கு பின் நடிகை கரீனா கபூர் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாகச் செய்திகள் வெளியானது. இதையடுத்து நடிகை சமந்தாவிடமும் ரசிகர்கள் கர்ப்பம் குறித்த கேள்வியை கேட்டனர். அதற்கு இப்படி பதில் கூறியுள்ளார் நடிகை சமந்தா.


Click it and Unblock the Notifications











