சமந்தாவின் மிரட்டலான நடிப்பில் பட்டையை கிளப்பும் தி ஃபேமிலி மேன் 2 டிரைலர் #SamanthaAkkineni

சென்னை: மும்பையில் இருந்து சென்னைக்கு மாறியுள்ள ஃபேமிலி மேன் மனோஜ் பாஜ்பாயிக்கு புது வில்லனாக நடிகை சமந்தா மிரட்டல் அடி கொடுக்கும் அட்டகாசமான தி ஃபேமிலி மேன் 2 டிரைலர் வெளியாகி உள்ளது.

Recommended Video

அசத்தலாக களமிறங்கிய Samantha Family Man 2 Trailer | Manoj Bajpai

இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே இணைந்து உருவாக்கிய இதன் முதல் சீசன் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இரண்டாவது சீசன் வரும் ஜூன் மாதம் அமேசான் பிரைமில் வெளியாகிறது.

ஸ்ரீகாந்த் திவாரி

ஸ்ரீகாந்த் திவாரி

வெப்சீரிஸ்களில் பாலிவுட் நடிகர்கள் களமிறங்கி கலக்கி வருகின்றனர். பிரபல பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாய் என்.ஐ.ஏ., ஏஜென்ட் ஸ்ரீகாந்த் திவாரியாக நடித்து அசத்திய தி ஃபேமிலி மேன் முதல் சீசன் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்நிலையில், அடுத்த மாதம் அதன் இரண்டாம் பாகம் வெளியாகிறது.

நம்ம முத்தழகு

நம்ம முத்தழகு

நடிகை பிரியாமணி இந்த வெப்சீரிஸில் நடிகர் மனோஜ் பாஜ்பாய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். சாதாரண குடும்பத் தலைவராக இருந்துக் கொண்டே இந்தியாவை அச்சுறுத்தும் தீவிரவாதிகளை ஸ்ரீகாந்த் திவாரி எப்படி வேட்டை ஆடுகிறார் என்பதை செம சுவாரஸ்யம் கலந்து இந்த வெப்சீரிஸில் கொடுத்துள்ளதே இதன் வெற்றிக்கு காரணம்.

வில்லியாக சமந்தா

வில்லியாக சமந்தா

இரண்டாவது சீசனின் வில்லியாக நடித்து மிரட்டி உள்ளார் நடிகை சமந்தா. ராஜி எனும் தற்கொலைப் படையை சேர்ந்த நபராக நடித்துள்ள சமந்தாவை ஸ்ரீகாந்த் திவாரி எப்படி கையாள போகிறார் என்பதை பார்க்க ரசிகர்கள் வெறித்தனமாக வெயிட் செய்து வருகின்றனர். #SamanthaAkkineni ஹாஷ்டேக்கை ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

மும்பை டு சென்னை

மும்பை டு சென்னை

முதல் சீசன் மும்பையில் நடைபெற்ற நிலையில், இரண்டாம் சீசன் கதையை சென்னைக்கு கொண்டு வந்துள்ளனர். டிரைலர் நடுவே வரும் தமிழ் வசனங்கள் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. டிரைலரில் ஒவ்வொரு ஃபிரேமிலும் நடிகை சமந்தா இதுவரை பார்த்திராத தோற்றத்தில் மிரட்டுகிறார்.

எப்போ ரிலீஸ்

கடந்த நவம்பர் மாதமே இந்த வெப்சீரிஸின் படப்பிடிப்பு முடிந்து தனது டப்பிங் பணிகளையும் முடித்து விட்டேன் என நடிகை சமந்தா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், வரும் ஜூன் 4ம் தேதி அமேசான் பிரைமில் தி ஃபேமிலி மேன் 2 ஸ்ட்ரீமிங் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X