முதல்ல நயன்தாரா, அப்புறம் டாப்ஸி, இப்ப சமந்தா... திணறடிக்கும் த்ரில்லர் டைரக்டர் வெயிட்டிங்
சென்னை: ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள த்ரில்லர் கதையில், சமந்தா நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
நயன்தாரா, ஆரி, லட்சுமி பிரியா, சந்திரமவுலி உட்பட பலர் நடித்து 2015 ஆம் ஆண்டு வெளியான படம், மாயா. அஸ்வின் சரவணன் இயக்கி இருந்த இந்தப் படம், நல்ல வரவேற்பை பெற்றது.
இந்தப் படம் தெலுங்கு, கன்னடத்திலும் ரீமேக் செய்யப்பட்டது. இதையடுத்து அஸ்வின் சரவணன் இயக்கிய படம், கேம் ஓவர். டாப்ஸி, வினோதினி, சஞ்சனா, ரம்யா சுப்ரமணியம் உட்பட பலர் நடித்திருந்தனர்.

சைக்காலஜி த்ரில்லர்
ஒய்நாட் ஸ்டூடியோஸ் தயாரித்திருந்த இந்த சைக்காலஜி த்ரில்லர் படம் இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆனது.

ஹீரோயினுக்கு
ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொண்ட இந்த இரண்டு படங்களுக்குப் பிறகு, அடுத்தும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட படத்தை இயக்க இருக்கிறார் அஸ்வின் சரவணன். இதற்காக அவர் நடிகை சமந்தாவிடம் கதை சொல்லி இருக்கிறார்.

சமந்தா
சமந்தா நடித்தால் தமிழ், தெலுங்கு என இரு மொழி படமாக எடுக்கலாம் என்று முடிவு செய்துள்ளனர். கதையை கேட்டுவிட்டு நடிப்பதாகச் சொல்லியிருக்கும் சமந்தா, இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. விரைவில் அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.

த ஃபேமிலிமேன்
தற்போது சமந்தா, த ஃபேமிலிமேன் என்ற வெப்சீரிஸின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதில் மனோஜ் பாய்பாய், பிரியாமணி உட்பட பலர் நடிக்கின்றனர். அடுத்து அவர் நடித்துள்ள 96 படத்தின் தெலுங்கு ரீமேக் ரிலீஸ் ஆக இருக்கிறது.


Click it and Unblock the Notifications











