கிரீன் இந்தியா சேலஞ்ச்.. செடி நட்ட பிரபலங்கள்.. வைரலாகும் புகைப்படம்!

ஹைதராபாத்: தெலுங்கு திரைப்படத்துறையில் முன்னணி நடிகராக வலம் வரும் நாகார்ஜுனா தற்போது பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

Recommended Video

Samantha Nargajuna Green India Challenge • Blissful Video

நாகார்ஜுனாவின் மகனும் தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகரான நாக சைதன்யா சில வருடங்களுக்கு முன்பு நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் தற்போது சமந்தா மற்றும் நாகார்ஜுனா இணைந்து வீட்டின் பின்புறத்தில் செய்த அறிய செயலை அனைவரும் பார்த்து வியந்து வருகின்றனர்.

கனவுக்கன்னியாக

கனவுக்கன்னியாக

தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து சமத்துப்பெண்ணாக ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட நடிகை சமந்தா இப்பொழுது தென்னிந்தியாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அஞ்சான், கத்தி, நான் ஈ, ரங்கஸ்தலம், தெறி உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களின் நடித்து தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படத் துறையின் முன்னணி நடிகையான சமந்தா தென்னிந்திய ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருகிறார்.

சிறந்த ஜோடி

சிறந்த ஜோடி

இவர் தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ள நாகார்ஜுனாவின் மகன் மற்றும் வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் நாக சைதன்யாவை 2017 ஆம் ஆண்டு காதலித்து இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். இவ்வாறு திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடி தென்னிந்தியாவில் அனைவராலும் ரசிக்கப்படும் மிகச் சிறந்த ஜோடி என பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

தொடர்ந்து குஷிப்படுத்தி

தொடர்ந்து குஷிப்படுத்தி

இந்நிலையில் தற்போதுள்ள லாக்டவுன் சமயத்தில் சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல்வேறு க்யூட்டான புகைப்படங்களையும் அதேசமயம் வித்தியாசமான யோகா புகைப்படங்களையும் பதிவிட்டு ரசிகர்களை தொடர்ந்து குஷிப்படுத்தி வருகிறார். அந்தவகையில் சமந்தா தற்போது பதிவிட்டுள்ள சில புகைப்படங்கள் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

அப்பா மகளாக

அப்பா மகளாக

நாகார்ஜுனாவும் சமந்தாவும் உண்மையில் மாமா, மருமகளாக இருந்தாலும், பழகிக் கொள்ளும் விதத்தில் அப்பா, மகளாக இருந்து வருகின்றனர். இவ்வாறு எப்பொழுதும் சமந்தாவை சொந்த மகள் போல பார்த்துக் கொள்ளும் நாகார்ஜுனா தற்பொழுது சமந்தாவுடன் இணைந்து தனது வீட்டின் பின் புறத்தில் தோட்டத்தை அழகாக பராமரித்து வருகிறார்.

நாகார்ஜுனாவுடன் இணைந்து

நாகார்ஜுனாவுடன் இணைந்து

சமீபத்தில் ட்ரண்டாகி வரும் கிரீன் இந்தியா சேலஞ்ச்காக சமந்தா தனது வீட்டுத் தோட்டத்தில் மாமனார் நாகார்ஜுனாவுடன் இணைந்து மூன்று செடிகளை நட்டு அதற்கு தண்ணீர் ஊற்றுவார் இந்த காட்சியை நடிகர் அகில் புகைப்படமாகவும், வீடியோவாகவும் எடுத்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ்

இவ்வாறு நடிகை சமந்தா தனது குடும்பத்தாருடன் இணைந்து செய்துள்ள இந்த அபார செயலைப் பார்த்து இவரது ரசிகர்கள் உட்பட பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும் இதே போன்ற கிரீன் இந்தியா சேலஞ்ச் செய்து மூன்று செடிகளை நட்டு அந்த வீடியோவை பகிரும் படி நடிகை கீர்த்தி சுரேஷ், ரஷ்மிகா மந்தனா மற்றும் சில்பா ரெட்டி போன்றோருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பரிந்துரை செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X