என்ன சமந்தாவும், விஜய் தேவரகொண்டாவும் நீச்சல் குளத்துல இருக்காங்க.. ஒரே குஷி தான் போல!
சென்னை: சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா நடிப்பில் இன்று வெளியாகி உள்ள குஷி படத்தின் ரிலீஸ் காரணமாக செம குஷியில் இருப்பது யாரென்றால் சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா தான்.
ஏற்கனவே விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தனாவும் மாலத்தீவில் ஒரே நீச்சல் குளத்தில் எடுத்த இரு வேறு போட்டோக்கள் என கிசுகிசுக்கள் கிளம்பிய நிலையில், தற்போது குஷி படத்தின் ரிலீஸை முன்னிட்டு சமந்தா வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் போஸ்ட்டில் அவர் நீச்சல் குளத்தில் உள்ளார்.

அதே போல விஜய் தேவரகொண்டாவும் நீச்சல் குளத்தில் இருந்த படி ரசிகர்களை குஷி படத்தை பார்த்து என்ஜாய் பண்ண சொல்லியிருக்கிறார்.
நீச்சல் குளத்தில் சமந்தா: குஷி படம் வெளியாகி உள்ள நிலையில், நடிகை சமந்தா நீச்சல் குளத்தில் குளிக்கும் புகைப்படத்தையும் கலிபோர்னியாவில் தனியாக தனது ஹாலிடேவை கொண்டாடும் போட்டோக்களையும் இன்று வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார்.

நடிகை சமந்தா குளிர் அதிகம் உள்ள மலை பிரதேசத்தில் தனது உடல்நிலையை சீராக்கும் சிகிச்சையில் ஈடுபட்டு வருகிறாரா என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன. சமந்தாவை செம சந்தோஷமாக பார்த்த ரசிகர்கள் இப்படியே ஹேப்பியா எப்பவும் இருக்கணும் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
விஜய் தேவரகொண்டா வீடியோ: நடிகர் விஜய் தேவரகொண்டாவும் நீச்சல் குளத்தில் இருந்தே ரசிகர்களை குஷி படத்தை பார்க்க தெலுங்கில் பேசும் ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள், சமந்தா போட்டோக்களை இவரும் இவர் வீடியோவை சமந்தாவும் எடுத்தார்களா என்ன? இருவரும் அமெரிக்காவில் உள்ளனரா? என ஏகப்பட்ட ஒருவேளை இருக்குமோ டெம்பிளேட் கேள்விகளை கேட்டு வருகின்றனர்.
ரகசிய திருமணம் முடிஞ்சிடுச்சா: சில நெட்டிசன்கள் சமீபத்தில் விஜய் தேவரகொண்டா தனக்கு திருமணம் நடந்தால் அது ரகசியமாகத்தான் இருக்கும் என்றும் மீடியாக்களுக்கு அறிவிக்க மாட்டேன் எனக்கூறியிருந்தார். இந்நிலையில், ரகசிய திருமணம் ஏதாவது முடிந்து விட்டதா என்றும் நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
சமீபத்தில் தனது காதலியின் கையை மட்டும் காட்டியிருந்த விஜய் தேவரகொண்டா சீக்கிரமே அவரை அறிமுகம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











