மார்வெலில் மாஸ் காட்டும் சமந்தா.. தீபாவளிக்கு செம ட்ரீட் இருக்கு போல.. விஜய் பத்தி சொன்னது தான் செம!

சென்னை: ஹைதராபாத்தில் நடைபெற்ற மார்வெல் நிகழ்ச்சியில் நடிகை சமந்தா கலந்து கொண்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ட்ரீட் கொடுத்துள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக சமந்தா ரெஸ்ட் எடுத்து வருகிறார் என நினைத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு சினிமாவை விட்டு எங்கேயும் போக மாட்டேன் என தொடர்ந்து தெளிவுப்படுத்தி வருகிறார் சமந்தா.

Samantha attends Marvels function and talks about Vijay too

சமீபத்தில் மும்பையில் தென்பட்ட சமந்தா தற்போது ஹைதராபாத்தில் மார்வெல் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நிலையில், தீபாவளிக்கு செம ட்ரீட் காத்திருக்கு என ரசிகர்கள் எதிர்பார்க்கத் தொடங்கி உள்ளனர்.

மேலும், நடிகர் விஜய் குறித்தும் சமந்தா அந்த நிகழ்ச்சியில் பேசியது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

தீபாவளிக்கு தி மார்வெல்ஸ்: கேப்டன் மார்வெல் உள்ளிட்ட மார்வெல் கதாபாத்திரங்கள் நடிப்பில் உருவாகி உள்ள பெண்களை மையப்படுத்திய சூப்பர் ஹீரோ படம் வரும் நவம்பர் 10ம் தேதி தீபாவளி ரிலீஸாக வெளியாகிறது. இந்நிலையில், அதுதொடர்பான புரமோஷனை தற்போது இந்தியாவில் மார்வெல் நிறுவனம் ஆரம்பித்துள்ளது.

சமந்தா பங்கேற்பு: மார்வெலின் தீவிர ரசிகையான நடிகை சமந்தா சிட்டாடல் வெப்சீரிஸில் நடித்து வரும் நிகழ்ச்சியில் ஹைதராபாத்தில் இன்று நடைபெற்ற மார்வெல் நிகழ்ச்சியில் நடிகை சமந்தா ஜீன்ஸ் மற்றும் டாப்ஸ் அணிந்து கொண்டு செம ஸ்வாகாக கலந்து கொண்டு கலக்கினார். அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் டிரெண்டாகி வருகின்றன.

Samantha attends Marvels function and talks about Vijay too

டப்பிங் கொடுத்துள்ளாரா: கேப்டன் மார்வெல் லீடு ரோலுக்கு நடிகை சமந்தா டப்பிங் கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. அதன் காரணமாக மார்வெல்ஸ் படம் தான் இந்த ஆண்டு தீபாவளிக்கு உலகம் முழுவதும் வசூல் வேட்டையை குவிக்கப் போவதாக ரசிகர்கள் எதிர்பார்ப்புகளை எகிற விட்டு வருகின்றனர்.

Samantha attends Marvels function and talks about Vijay too

விஜய் பற்றி: இந்திய நடிகர்கள் மார்வெல் படத்தில் இணைந்து நடித்தால் யாரெல்லாம் தகுதியானவர்கள் என நினைக்கிறீங்க என்கிற கேள்விக்கு நடிகை சமந்தா சட்டென அல்லு அர்ஜுன், விஜய், பிரியங்கா சோப்ரா உள்ளிட்டோர் கச்சிதமாக இருப்பார்கள் எனக் கூறியுள்ளார். நடிகர் விஜய் பற்றி சமந்தா சொல்லி உள்ள நிலையில், அந்த வீடியோ க்ளிப்பை ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X