சமந்தான்னு எழுதி போடுங்க.. துஷாரா விஜயன் மாதிரி இருக்கு.. ’பங்காரம்’ போஸ்டரை பங்கம் பண்ண ஃபேன்ஸ்!
சென்னை: நடிகை சமந்தாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது அடுத்த படத்தின் அறிவிப்பு ஒரு வழியாக வெளியாகி உள்ளது. சென்னையில் பிறந்து வளர்ந்த சமந்தா டோலிவுட் நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டு தெலுங்கு தேசத்து மருமகளாக மாறினார்.
தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த சமந்தா ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் வெளியான இந்தி வெப் சீரிஸ் தி ஃபேமிலி மேன் 2வில் நடித்து பாலிவுட் ரசிகர்களை கவர்ந்தார். அந்த வெப் சீரிஸ் மிகப்பெரிய வெற்றியடைந்த நிலையில் இந்தியில் பல படங்களில் நடிப்பார் சமந்தா என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ராஷ்மிகா மந்தனா, நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ் என பல தென்னிந்திய நடிகைகள் இந்தி படங்களில் நடித்து வரும் நிலையில் இன்னமும் சமந்தாவுக்கு ஒரு படம் கூட கிடைக்கவில்லை.

மயோசைடிஸ் எனும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா சில மாதங்கள் சினிமாவை விட்டு விலகி இருந்தார். சமீபத்தில் மீண்டும் நடிக்க வந்த சமந்தா ஐஸ்கிரீம் விளம்பரம், மம்முட்டியுடன் மலையாளத்தில் விளம்பரம் என நடித்து வந்த நிலையில் தற்போது தனது அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஹேப்பி பர்த்டே சமந்தா: 1987 ஆம் ஆண்டு ஏப்ரல் 28-ஆம் தேதி சென்னையில் பிறந்த நடிகை சமந்தா இன்று தனது 37-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். கிட்டத்தட்ட 40 வயது நெருங்க உள்ள நிலையில், இன்னமும் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் தனது நடிப்பால் அசத்தி வருகிறார்.
மெழுகு சிலை: உடல் எடையை கணிசமாக குறைத்து விட்ட சமந்தா பார்ப்பதற்கு அப்படியே மெழுகு சிலை போல காட்சி அளிக்கிறார். சமீபத்தில் வெளியான ஐஸ்கிரீம் விளம்பரத்தில் அந்த அளவுக்கு கவர்ச்சி காட்டி கலக்கி இருந்தார். மேலும், பிகினி உடை, உள்ளாடை அணியாமல் பெரும் கோட் சூட் அணிந்து கொண்டு போஸ் என கவர்ச்சியில் அசர அடித்து வந்த சமந்தா தற்போது தனது அடுத்த படத்தின் அறிவிப்பை பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ளார்.

பங்காரம் ஆக மாறிய சமந்தா: பிறந்தநாளை முன்னிட்டு நடிகை சமந்தா தனது புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பங்காரம் என தலைப்பு வைக்கப்பட்டுள்ள படத்தில் நடிக்கப் போவதாக அட்டகாசமான மோஷன் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சமந்தா வெளியிட்டுள்ளார். கையில் துப்பாக்கி ஏந்தி கொண்டு சமந்தா இருக்கும் கார்ட்டூன் டைப் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
துஷாரா விஜயன் போல இருக்கு: அந்த போஸ்டரில் சமந்தா நடிக்கிறார் என்று கூட இடம் பெறவில்லை. மேலும், இயக்குநர் பெயரும் அறிவிக்கப்படவில்லை. டிராலாலா தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில் சமந்தா நடிக்கும் பங்காரம் என்று மட்டுமே போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில், டக்குன்னு பார்த்தால் சமந்தா மாதிரி தெரியல துஷாரா விஜயன் மாதிரி இருக்கு என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். பிறந்தநாள் அதுவுமாக கூட சமந்தாவை சும்மா விடமாட்டீங்களா என ஹேட்டர்களுக்கு அவரது ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். சமந்தா செம ஸ்லிம்மாக மாறியுள்ள நிலையில், இந்த படம் அவருக்கு மிகப்பெரிய படமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் ஓடிடியில் சிட்டாடல் வெளியாக காத்திருக்கிறது.


Click it and Unblock the Notifications