மீண்டு வந்த சமந்தா... கைக்கோர்த்த வருண் தவான்: தொடங்கியது பாலிவுட் வெப் சீரிஸ்
மும்பை: சமந்தா நடித்த யசோதா திரைப்படம் கடந்தாண்டு நவம்பர் 11ம் தேதி வெளியானது.
இதனைத் தொடர்ந்து சமந்தா நடித்துள்ள சாகுந்தலம் திரைப்படம் அடுத்த மாதம் 17ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மயோசிடிஸ் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த சமந்தா படப்பிடிப்புகளில் கலந்துகொள்ளாமல் அவரது வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.
இந்நிலையில், சமந்தா மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

ஹிட் கொடுத்த யசோதா
இந்தியளவில் முன்னணி நடிகையாக கலக்கி வரும் சமந்தா நடிப்பில் கடைசியாக யசோதா திரைப்படம் வெளியானது. கடந்தாண்டு நவம்பர் 11ம் தேதி பான் இந்தியா படமாக ரிலீஸான யசோதா, பாக்ஸ் ஆபிஸில் 33 கோடிக்கும் மேல் வசூலித்திருந்தது. இதனால் அவரது அடுத்தடுத்த படங்கள் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே சென்றது. இந்நிலையில், சமந்தாவின் அடுத்த படமான சாகுந்தலம் பிப்ரவரி 17ம் தேதி ரிலீஸாகவுள்ளது.

மீண்டுவந்த சமந்தா
முன்னதாக கடந்த சில மாதங்களாக மயோசிடிஸ் தசை அழற்சி நோயால் அவதிப்பட்டு வந்தார் சமந்தா. அதுகுறித்து சமந்தாவே மனம் திறந்து பேசியிருந்தார். மேலும் உடலில் குளுகோஸ் ஏற்றியபடி சிகிச்சை எடுத்துகொண்ட போட்டோவையும் ஷேர் செய்திருந்தார். அதேபோல், யசோதா ப்ரோமோஷன் பேட்டியிலும் தனது உடல்நிலை குறித்து கண் கலங்கினார். இதனால் சமந்தா சில மாதங்கள் நடிப்பில் இருந்து விலகி ஓய்வெடுக்கவுள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் அவர் தற்போது ஃபீனிக்ஸ் பறவையாக மீண்டு வந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை கொடுத்துள்ளது.

பாலிவுட் வெப் சீரிஸ்
சமீபத்தில் சாகுந்தலம் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியிலும் சமந்தா பங்கேற்று இருந்தார். இந்நிலையில், தி பேமிலி மேன் வெப் சீரிஸ் இயக்குநர்கள் டிகே & ராஜ் கூட்டணியில் மீண்டும் இணைந்துள்ளார் சமந்தா. தி பேமிலி மேன் வெப் சீரிஸ் தான் சமந்தாவுக்கு பாலிவுட்டில் மிகப் பெரிய அடையாளம் கொடுத்தது. அதனால் டிகே & ராஜ் இயக்கும் சிட்டாடல் என்ற அடுத்த வெப் சீரிஸிலும் கமிட் ஆகியுள்ளார். இந்த வெப் சீரிஸ் ஹாலிவுட் இயக்குநர்களான ரூசோ பிரதர்ஸின் படத்தில் இருந்து ரீமேக் செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது.

படப்பிடிப்பில் வருண் தவானுடன்
சிட்டாடல் வெப் சீரிஸ்ஸின் ஷூட்டிங் மும்பையில் தொடங்கிய நிலையில், சமந்தா அதில் கலந்துகொண்டுள்ளார். இதற்காக ஹைதராபாத்தில் இருந்து மும்பை பறந்த சமந்தா பாலிவுட் நடிகர் வருண் தவானுடன் ஷூட்டிங்கில் கலந்துகொண்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன. மயோசிடிஸ் பிரச்சினயால் வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்த சமந்தா, மீண்டும் படப்பிடிப்புக்கு சென்றது அவரது ரசிகர்களிடம் உற்சாகத்தை கொடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களின் ஷூட்டிங்கிலும் சமந்தா பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications