கர்மா சும்மா விடாது.. சாபம் விட்ட இயக்குநர் ராஜ் நிடிமோரின் மனைவி.. சமந்தாவை துரத்தும் சர்ச்சை!
சென்னை: இயக்குனர் ராஜ் நிடிமோருடன் டேட்டிங் செய்து வருவதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் சோஷியல் மீடியா மற்றும் ஊடகங்களில் செய்திகள் பரவி வரும் நிலையில், இயக்குனர் ராஜ் நிடிமோருவின் மனைவி தனது இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்டை போட்டுள்ளார். அது இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது.
அழகான க்யூட் ஜோடியாக வலம் வந்த சமந்தா, நாக சைத்தன்யா ஜோடிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அது நாளடைவில் பெரிதாக கடைசியில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இதையடுத்து படத்தில் கவனம் செலுத்தி வந்த சமந்தா மயோசைட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டார்.
இதனால், மனவேதனையில் இருந்த சமந்தா, அதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்டு சினிமாவில் இருந்து ஒதுங்கி ஓய்வு எடுத்து வருகிறார்.

தொடரும் வதந்தி: சமந்தா என்னத்தான் சினிமாவில் இருந்து ஒதுங்கி ஓய்வு எடுத்து வந்தாலும், அவர் குறித்த சர்ச்சை தொடர்ந்து வந்து கொண்டு தான் இருக்கிறது. அண்மையில் சமந்தா, தி பேமிலி மேன், சிட்டாடல் ஆகிய வெப் தொடர்களை இயக்கிய ராஜ் நிடிமோருடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார். அதுமட்டுமில்லாமல், இருவரும் ஜோடியாக காளஹஸ்தி கோயிலுக்குச் சென்று ராகு, கேது பூஜை செய்தனர். இதனால், இவர்கள் இருவரும் காதலித்து வருவதாகவும் விரைவில் ராஜ் நிடிமோரை சமந்தா திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் இணையத்தில் செய்திகள் பரவி வருகின்றன.ஆனால், இணையத்தில் பரவி வரும் இந்த வதந்தியை சமந்தாவின் மேனேஜர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். சமந்தாவை பற்றிய வரும் காதல் வதந்திகள் எதுவும் உண்மையில்லை. அவர் நாக சைத்தன்யாவை பிரிந்த பிறகு, திருமணம் செய்து கொள்ளும் ஐடியாவிலேயே இல்லை என்று கூறியிருந்தார்.
கர்மா சும்மாவிடாது: இந்நிலையில், இயக்குநர் ராஜ் நிடிமொருவின் மனைவி ஷியாமலி டே, தனது இன்ஸ்டாகிராமில் 'இந்த போட்டோவை பார்த்து என்னிடம் நலம் விசாரித்த அனைவரையும் கடவுள் ஆசீர் வதிக்கட்டும்' என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு பதிவில், ''நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் செய்த நல்ல செயல்களுக்கு கர்மா உங்களைத் தேடி வந்து ஆசீர்வதிக்கும். நீங்கள் செய்த தீய செயல்களுக்கு கர்மா உங்களைப் பின்தொடரும். அது உங்களைத் தேடி வந்து தண்டிக்கும். உங்கள் ஆன்மா மலரட்டும்'' என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவினைப் பார்த்த மலர், ஒரு பெண்ணின் வாழ்க்கை கெடுப்பது பாவம், அந்த தவறை செய்யாதீர்கள் சமந்தா என்றும், நாக சைத்தன்யா செய்தது போல, வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு நல்ல வாழ்க்கையை தொடங்குகள் என்று பலரும் சமந்தாவிற்கு அட்வைஸ் கொடுத்து வருகின்றனர்.
இயக்குநரான ராஜ் நிடிமோரு, தி பேமிலி மேன் 2 என்கிற வெப் தொடரை டிகே என்பவருடன் சேர்ந்து இயக்கி இருந்தார். மேலும், இவர் சிட்டாடெல் என்கிற வெப் தொடரை இயக்கி இருந்தார். தி பேமிலி மேன் 2 வெப் தொடரில் சமந்தா நடித்த போதே இருவருக்கும் இடையே நல்ல நட்பு ஏற்பட்டதாகவும், அந்த நட்பு சிட்டாடெல் படப்பிடிப்பின் போது காதலாக மாறியதாகம் கூறப்படுகிறது. இயக்குனர் ராஜ் நிடிமோருக்கு ஏற்கனவே திருமணமாகி, ஷியாமலி மனைவி என்கிற மனைவி உள்ளார்.


Click it and Unblock the Notifications











