Samantha: சாகுந்தலம் ஃபிளாப் ஆனால் என்ன? ஹைதராபாத்தில் இத்தனை கோடிக்கு வீடு வாங்கிய சமந்தா!

ஹைதராபாத்: நடிகை சமந்தா 3 படுக்கையறைகள் கொண்ட பிரம்மாண்ட சொகுசு குடியிருப்பை ஹைதராபாத்தில் பல கோடிகளுக்கு வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நடிகை சமந்தா அதிலிருந்து மீண்டு வர ஏகப்பட்ட தீவிர சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறார்.

Samantha buys a 3BHK Flat at Hyderabad with a huge price stuns fans

பல பிரச்சனைகள் சூழ்ந்து இருந்தாலும் தொடர்ந்து சினிமாவில் டாப் ஹீரோயினாக வலம் வரும் சமந்தா ஹைதராபாத்தில் புதிய வீடு ஒன்று வாங்கி உள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

சாகுந்தலம் ஃப்ளாப்: இதுவரை இல்லாத அளவுக்கு நடிகை சமந்தா நடிப்பில் வெளியான படங்களிலேயே படுதோல்வியை சந்தித்த படம் என்றால் அது சாகுந்தலம் தான் என அந்த படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜுவே சமீபத்தில் அளித்த பேட்டியில் மனவேதனையுடன் பேசி இருந்தார்.

பொதுவாக நடிகர்களின் படங்கள் தோல்வியை சந்தித்தால் அதற்கான இழப்பீடுகளை அவர்கள் தருவார்கள். ஆனால், நடிகைகள் பெரும்பாலும் அதுபோன்று செய்வதில்லை என்கிற பேச்சுவார்த்தைகளும் அடிபட்டு வருகின்றன. சாகுந்தலம் படத்தில் லீடு ரோலில் சமந்தா நடித்திருந்த நிலையில், அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், தனது அடுத்த படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார் சமந்தா.

Samantha buys a 3BHK Flat at Hyderabad with a huge price stuns fans

ஹைதராபாத்தில் புது வீடு: இந்நிலையில், நடிகை சமந்தா ஹைதராபாத்தில் புது வீடு ஒன்றை பல கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே ஜூபிளி ஹில்ஸில் 100 கோடி மதிப்பிலான சொகுசு பங்களாவுக்கு சொந்தக்காரரான சமந்தா மும்பையில் 15 கோடி ரூபாய்க்கு சொகுசு வீடு ஒன்று வாங்கி உள்ளார் என்கின்றனர்.

இந்நிலையில், ஹைதராபாத்தில் 3BHK வீடு ஒன்றை நடிகை சமந்தா வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

எத்தனை கோடி: சுமார் 7.8 கோடி ரூபாய் மதிப்பில் 3 படுக்கையறைகள் கொண்ட இந்த வீட்டை நடிகை சமந்தா வாங்கி உள்ளார் என்கின்றனர். 7,944 சதுர அடியில் அந்த குடியிருப்பு உள்ளதாகவும் ஏகப்பட்ட வசதிகளை கொண்டு சொகுசு குடியிருப்பாக உள்ள அந்த வீட்டை சமீபத்தில் நடிகை சமந்தா வாங்கிப் போட்டுள்ளார் என்கின்றனர்.

Samantha buys a 3BHK Flat at Hyderabad with a huge price stuns fans

விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்தில் நடித்துள்ள சமந்தா விரைவில் அந்த படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார். சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது. மேலும், பாலிவுட் நடிகர் வருண் தவான் உடன் இணைந்து சிட்டாடல் வெப்சீரிஸிலும் நடிகை சமந்தா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X