இனிமே பாலிவுட் தான்.. மும்பையில் பல கோடிக்கு வீடு வாங்கிய சமந்தா.. வெறித்தனமான வொர்க்கவுட் வேற!

மும்பை: நடிகை சமந்தா மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், பல பாலிவுட் படங்கள் அவர் கையை விட்டுச் சென்றதாக தகவல்கள் பரவின. சமந்தா மீண்டும் எழுந்து நடக்கவே மாட்டார் என்றும் பேச்சுக்கள் அடிபட்டன.

ஆனால், அனைத்தையும் பொய்யாக்கும் படி தனது விடா முயற்சியால் கடந்த ஆறு மாதங்களாக போராடி மீண்டும் பழைய ஃபார்முக்கு மாறி உள்ளார்.

கடும் வொர்க்கவுட் செய்யும் வீடியோக்களை பதிவிட்டு வரும் சமந்தா, தொடர்ந்து பாலிவுட் படங்களி நடிக்க உள்ள நிலையில், மும்பையில் பல கோடி கொடுத்து அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு ஃபிளாட் வாங்கி உள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

வீடு வாங்கிய ராஷ்மிகா

வீடு வாங்கிய ராஷ்மிகா

தென்னிந்திய நடிகைகள் தொடர்ந்து பாலிவுட் படங்களில் போட்டிப் போட்டு நடித்து வருகின்றனர். தென்னிந்திய படங்களை ரீமேக் செய்து நடிப்பது மட்டுமின்றி தென்னிந்திய ஹீரோயின்களுக்கும் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. நடிகை ராஷ்மிகா மந்தனா குட்பை, மிஷன் மஜ்னு உள்ளிட்ட பாலிவுட் படங்களில் நடித்துள்ள நிலையில், அடுத்ததாக அனிமல் படத்தில் நடித்து வரும் நிலையில், மும்பையில் சமீபத்தில் புது வீடு வாங்கி அங்கேயே செட்டில் ஆகி உள்ளாராம்.

மும்பையில் சமந்தா வீடு

மும்பையில் சமந்தா வீடு

நடிகை ராஷ்மிகா மந்தனாவை தொடர்ந்து நடிகை சமந்தாவும் மும்பையில் தற்போது சொகுசு வீடு வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருந்த சமந்தா குணமாகி வரும் நிலையில், மீண்டும் பாலிவுட் படங்களில் பிசியாகி உள்ளார்.

15 கோடி ரூபாய்

15 கோடி ரூபாய்

சென்னை பொண்ணான சமந்தா நடிகர் நாகார்ஜுனாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், ஹைதராபாத்தில் குடிபுகுந்தார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்த நிலையில், சினிமாவில் தனது மொத்த கவனத்தையும் செலுத்தி வருகிறார். சாகுந்தலம் படத்தைத் தொடர்ந்து பாலிவுட்டில் பல படங்களில் பிசியாகி உள்ள நிலையில், கடற்கரையை பார்த்தபடி இருக்கும் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் 15 கோடி ரூபாய்க்கு வீடு வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வெறித்தனமான வொர்க்கவுட்

வெறித்தனமான வொர்க்கவுட்

மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நடிகை சமந்தா மீண்டும் எழுந்து வருவதே கஷ்டம் எனக் கூறப்பட்ட நிலையில், சிறப்பு சிகிச்சைகள் மூலம் பழையபடி குணமானது மட்டுமின்றி அடுத்து அவர் நடிக்க உள்ள சிட்டாடல் வெப்சீரிஸில் நடிக்க உள்ள நிலையில், அதற்காக மீண்டும் வொர்க்கவுட் செய்து தனது உடம்பை ஃபிட்டாக்கி வருகிறார் சமந்தா.

வருண் தவான் உடன்

வருண் தவான் உடன்

இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் வெளியான தி ஃபேமிலி மேன் 2 வெப்சீரிஸில் ராஜி கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டிய சமந்தா மீண்டும் அதே இயக்குநர்கள் இயக்கத்தில் உருவாக உள்ள சிட்டாடல் வெப்சீரிஸில் நடிக்க உள்ளார். பாலிவுட் நடிகர் வருண் தவானுக்கு ஜோடியாக இந்த வெப்சீரிஸில் சமந்தா நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X