Samantha: ஆண் சூப்பர் ஸ்டார்கள் ஒரே நாளில் உருவாவதில்லை.. சமந்தா வலியுறுத்தல்!
சென்னை: சமந்தாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 'டிராலலா மூவிங் பிக்சர்ஸ்' தயாரிப்பில், பெண்களை மையமாகக் கொண்ட ஆக்ஷன் டிராமா கதைகளத்தில், குறைந்த பட்ஜெட்டில் வெளியான 'மா இண்டி பங்காரம்' திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் வசூல் வேட்டை நடத்தி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இப்படத்தின் மெகா சக்சஸைத் தொடர்ந்து, நடிகை சமந்தா கொடுத்த பேட்டி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சமந்தா: திரையுலகில் டாப் நடிகையாக இருந்தாலும், இன்னும் பெரிய சம்பளத்திற்காகவும், படப்பிடிப்பு நேரங்களுக்காகவும் நடிகைகள் ஏன் போராட வேண்டியுள்ளது? என்ற கேள்விக்கு பதில் அளித்த சமந்தா,
ஆண் சூப்பர் ஸ்டார்கள் யாரும் ஒரே நாளில் உருவாவதில்லை. ஒரு ஹீரோவை கடவுள் ரேஞ்சுக்குத் திரையில் காட்டுவதற்குக் பின்னால் எத்தனையோ இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் வருட கணக்கான உழைப்பும், நேரமும், முதலீடும் இருக்கிறது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அந்த அளவிற்கான நேரமோ, உழைப்போ அல்லது முதலீடோ பெண் நட்சத்திரங்களை உருவாக்குவதற்கு இங்கு வழங்கப்படுவதில்லை. ஆண் சூப்பர் ஸ்டார்களை உருவாக்கப் போடும் அதே உழைப்பை, ஒரு திறமையான நடிகை மீது காட்டினால், பெண்களிலும் சூப்பர் ஸ்டார்களை உருவாக்க முடியும். எங்களுக்குத் தேவைப்படுவதெல்லாம் சரியான நேரமும், முதலீடும் மட்டும்தான் என்று சினிமாவில் நிலவும் பாலின பாகுபாடு குறித்து மிக ஓப்பனாகப் பேசியுள்ளார்

சண்டையே வந்தது இல்லை: 'மா இண்டி பங்காரம்' படத்தை சமந்தாவுடன் இணைந்து அவரது கணவரும் பிரபல இயக்குனருமான ராஜ் நிதிமோரு, ராஜ் & டிகே தயாரித்துள்ளார். அவரோடு பணிபுரிந்தது குறித்துப் பேசிய சமந்தா, நிறைய பேர் நம்ப மாட்டார்கள், ஆனால் ராஜுடன் இணைந்து வேலை செய்வது மிகவும் எளிதானது. நாங்கள் மிகச் சாதாரணமான, விஷயங்களைக்கூட விவாதிப்போம். இத்தனை வருடங்களில் எங்களுக்குள் ஒருமுறை கூட சண்டை வந்தது இல்லை. தனிப்பட்ட வாழ்க்கை மட்டுமின்றி, சினிமாவில் நாங்கள் ஒருவருக்கொருவர் முழுமையாகப் புரிந்துகொண்டோம் என்றார்த.
அடுத்தடுத்த ப்ராஜெக்ட்ஸ்: 'மா இண்டி பங்காரம்' படத்தின் வெற்றி, தயாரிப்பாளராகப் பெரிய தன்னம்பிக்கையைக் கொடுத்துள்ளதாகக் கூறியுள்ள சமந்தா, அடுத்ததாகத் தனது தயாரிப்பில் பல புதிய கதைகளை உருவாக்க பல ஸ்கிரிப்ட்களைத் தயார் செய்து வருவதாகவும், இதன் மூலம் புதிய திறமைகளுக்கு வாய்ப்பளிக்க இருக்கிறோம் என்று சமந்தா பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications