யசோதா வெற்றியை கொண்டாடிய சமந்தா… யாருடன், எப்படி செலிப்ரேட் பண்ணிருக்காங்கன்னு தெரியுமா?

ஐதராபாத்: சமந்தா நடித்துள்ள யசோதா திரைப்படம் கடந்த வாரம் 11ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

சமந்தா முதன்மையான பாத்திரத்தில் நடித்துள்ள யசோதா படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில், யசோதா படத்தின் வெற்றியை கொண்டாடிய சமந்தா, அதன் போட்டோவையும் ஷேர் செய்துள்ளார்.

யசோதாவாக மாறிய சமந்தா

யசோதாவாக மாறிய சமந்தா

சமந்தா முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள யசோதா, பான் இந்தியா படமாக தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம் மொழிகளில் ரிலீஸாகியுள்ளது. ஹரீஷ் நாராயண், கே. ஹரி ஷங்கர் இணைந்து இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், யசோதா முதல் வாரம் பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டியுள்ளது. படம் வெளியான மூன்று நாட்களில் இதுவரை 11 கோடி வரை வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. முதல் இரண்டு நாட்களில் 7 கோடி வரை கலெக்‌ஷன் செய்த யசோதா மூன்றாம் நாளில் 4 கோடி வசூலித்துள்ளது. உலகம் முழுவதும் யசோதா படத்துக்கு நல்ல ஒப்பனிங் கிடைத்துள்ளது முக்கியமானது.

வெற்றியை கொண்டாடிய சமந்தா

வெற்றியை கொண்டாடிய சமந்தா

இந்நிலையில், மயோசிடிஸ் நோயால் சிகிச்சை பெற்று வரும் சமந்தா யசோதா படத்தின் வெற்றியை கொண்டாடியுள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள சமந்தா, தனது உடற்பயிற்சியாளர் ஜூனைத் என்பவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும், "எனக்குப் பிடித்த ஜிலேபியை சாப்பிட ஜுனைத் இதுவரை சம்மதிக்கவில்லை. யசோதாவின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், முக்கியமான சம்பவம் இன்று நடந்துள்ளது. கடந்த சில மாதங்களாக எனக்கு ஆதரவாக நின்றவர்களில் நீங்களும் முக்கியமானவர். விரக்தி, பலவீனம், கண்ணீர், அதிகளவு ஸ்டீராய்டு சிகிச்சை என எல்லாவற்றிலும் நீங்கள் என்னுடன் இருந்தீர்கள். உங்களால்தான் நான் இப்படி ஆனேன். அதற்கு நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், பயிற்சியாளர் ஜூனைத்தை கட்டிப்பிடித்துக் கொண்டு நிற்கும் போட்டோவையும் ஷேர் செய்துள்ளார்.

கடினமானச் சூழலில் சாம்

கடினமானச் சூழலில் சாம்

சமந்தாவின் இன்ஸ்டாகிராம் போஸ்ட் வைரலாகி வரும் நிலையில், யசோதா படத்தின் வெற்றிக்கு பலரும் வாழ்த்துக் கூறி வருகின்றனர். முன்னதாக மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்த சமந்தா, யசோதா ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசியிருந்தார். அப்போது, "சில நாட்களில் படுக்கையில் இருந்து எழுவது கடினம். சில நாட்களில் நான் போராட விரும்புகிறேன். நான் கைவிட விரும்பும் நாட்களை விட போராட விரும்பும் நாட்கள் அதிகரித்து வருகின்றன. உயிருக்கு ஆபத்து இல்லை, எந்த நேரத்திலும் இறந்து விடவும் மாட்டேன். ரொம்பவே டயர்டாக ஃபீல் செய்கிறேன். அதேபோல், நான் எப்போதும் ஒரு போராளி. தொடர்ந்து போராடுவேன்" என உருக்கமாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இவள் தான் யசோதா

இவள் தான் யசோதா

யசோதா படத்தில் வாடகைத் தாயாக நடித்துள்ள சமந்தா, ரொம்பவே சென்சிட்டிவான கேரக்டரில் நடித்து அசத்தியுள்ளார். அதேபோல், ஆக்சன் காட்சிகளிலும் அதிகம் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார். சமந்தாவுடன் வரலக்‌ஷ்மி சரத்குமார், சம்பத்ராஜ், உன்னி முகுந்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார். மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தாவுக்கு யசோதா படத்தின் வெற்றி பெரிய தன்னம்பிக்கையை கொடுத்துள்ளது. இதனால், சமந்தாவின் நடிப்பில் வெளியாகவுள்ள அடுத்தடுத்த படங்களுக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X