'அவர் சொல்ற கதைய கேளுங்க..' தனது பட ஹீரோ இயக்கத்தில் நடிக்க, கணவரை சம்மதிக்க வைத்தாரா நடிகை சமந்தா?

By

சென்னை: தனது பட ஹீரோவுக்காக, நடிகை சமந்தா தனது கணவரை சம்மதிக்க வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Recommended Video

Vaathi Coming #QuarantineDance | Lock Down | Celebrity Quarantine

தமிழில், மாஸ்கோவின் காவிரி படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் ராகுல் ரவீந்திரன். ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் இயக்கிய இந்தப் படத்தில் சமந்தா ஹீரோயினாக நடித்தார்.

இதையடுத்து விண்மீன்கள், சூரிய நகரம், வணக்கம் சென்னை படங்களில் நடித்த ராகுல் ரவீந்திரன் தெலுங்கிலும் நடித்துவந்தார்.

இயக்குனர் ஆனார்

இயக்குனர் ஆனார்

அங்கு, அண்டாள ராக்சஷி, டைகர், ஶ்ரீமந்துடு, யு டர்ன் உட்பட சில படங்களில் நடித்த ராகுல் ரவீந்திரன், பிரபல பின்னணி பாடகி சின்மயி-யின் கணவர். படங்களில் நடித்து வந்த ராகுல், சுஷாந்த், ருஹானி சர்மா நடித்த Chi La Sow என்ற தெலுங்கு படம் மூலம் இயக்குனர் ஆனார். இந்தப் படம் கவனிக்கப்பட்டது. சிறந்த ஒரிஜினல் திரைக்கதைக்காக தேசிய விருதும் பெற்றது.

நாகார்ஜூனா

நாகார்ஜூனா

இதையடுத்து கடந்த ஆண்டு 'மன்மதுடு 2' படத்தை இயக்கினார். இதில் நாகார்ஜூனா ஹீரோவாக நடித்தார். ரகுல் பிரீத் சிங், வெண்ணிலா கிஷோர், ரோகினி, தேவதர்ஷினி உட்பட பலர் நடித்தனர். கீர்த்தி சுரேஷ், சமந்தா உட்பட சிலர் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தனர். சுகுமார் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

நாக சைதன்யா

நாக சைதன்யா

இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதையடுத்து ராகுல் ரவீந்திரன் இயக்கும் அடுத்த படத்தில், நாகார்ஜூனாவின் மகன்களான நாக சைதன்யாவும் அகில் அக்கினேனியும் நடிப்பதாகக் கூறப்பட்டது. இதை, கடந்த சில நாட்களுக்கு முன் ராகுல் ரவீந்திரன் மறுத்திருந்தார். இந்நிலையில் அவர் இயக்கும் படத்தில் நாக சைதன்யா மட்டும் நடிக்கிறார்.

சமந்தா உதவி

சமந்தா உதவி

இதற்கு நடிகை சமந்தா உதவியதாகக் கூறப்படுகிறது. சமந்தாவுக்கும் ராகுல் ரவீந்திரனுக்கும் மாஸ்கோவின் காவிரி படத்தில் நடித்தபோது நட்பு ஏற்பட்டது. அந்த நட்பின் அடிப்படையில், இப்போது அவருக்கு உதவியுள்ளாராம். ராகுலின் அடுத்த பட கதை பற்றி நாக சைதன்யாவிடம் சமந்தா பேசியதாகவும் இதையடுத்து அவர் இயக்கத்தில் நடிக்க ஓகே சொன்னதாகவும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X