அக்ஷயுடன் புஷ்பா பாட்டுக்கு ஆட்டம்போட்ட சமந்தா.. இதுவும் நல்லாத்தான் இருக்கு!
மும்பை : நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்தது புஷ்பா படம்.
இந்தப் படத்தில் சமந்தா ஊ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு சூப்பர் குத்தாட்டம் போட்டிருந்தார்.
இந்தப் பாடல் அவருக்கு மட்டுமில்லாமல் படத்திற்கும் அதன் வெற்றிக்கும் முக்கிய காரணமாக அமைந்தது.

புஷ்பா படம்
நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் திரையரங்குகளில் ரிலீசானது புஷ்பா படம். இந்தப் படம் சிறப்பான திரைக்கதையுடன் ரசிகர்களை மிரட்டியது. புஷ்பான்னா ப்ளவர் இல்ல.. பயர் என்ற இந்தப் படத்தின் டயலாக் அனைவரையும் கவர்ந்தது.

ரசிகர்கள் வரவேற்பு
சிவப்பு சந்தன மரக்கடத்தலை மையமாக கொண்டு வெளியானது படம். இதில் முதலில் மரக்கடத்தலில் ஈடுபடும் ஹீரோ, தொடர்ந்து கேங்ஸ்டராக மாறுவது படத்தின் ஹைலைட்டாக பார்க்கப்பட்டது. பகத் பாசிலின் நடிப்பும் படத்திற்கு சிறப்பாக கைக்கொடுத்தது. பான் இந்தியா படமாக வெளியான இந்தப் படத்திற்கு சர்வதேச அளவில் ரசிகர்கள் சிறப்பான வரவேற்பை அளித்தனர்.

ஊ சொல்றியா பாடல்
இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், சமந்தா ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்ட ஊ சொல்றியா மாமா பாடல் மிகவும் சிறப்பாக அமைந்தது. அவர் அப்போதுதான் தனது விவாகரத்து முடிவை அறிவித்திருந்தார். இதுவும் இந்தப் பாடலுக்கான விளம்பரமாக அமைந்தது.

சமந்தாவிற்கு புகழ்
இந்தப் பாடல் சமந்தாவின் புகழை மேலும் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இதனால் அவருக்கு இந்திய அளவில் சிறப்பான நடிகை என்ற அந்தஸ்து கிடைத்துள்ளது. இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இதனிடையே கரண் ஜோகரின் காபி வித் கரண் நிகழ்ச்சியில் நடிகர் அக்ஷய் குமாருடன் பங்கேற்றுள்ளார் சமந்தா.

அக்ஷயுடன் சமந்தா ஆட்டம்
இந்த நிகழ்ச்சி இன்றைய தினம் ஒளிபரப்பாக உள்ள நிலையில், அதிகமான ப்ரமோஷன்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இதில் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு அக்ஷயுடன் இணைந்து சமந்தா ஆட்டம் போட்டுள்ள ப்ரமோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அக்ஷயும் சமந்தாவிற்கு ஈடுகொடுத்து ஆடியுள்ளார்.
அடுத்தடுத்த படங்கள்
சமந்தா தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கடந்த இரு மாதங்களுக்கு முன்பு அவரது காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றது. இதையடுத்து தற்போது அவரது யசோதா, குஷி படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.


Click it and Unblock the Notifications











