மீண்டும் கணவர் நாக சைதன்யாவுடன் சேர போகிறாரா சமந்தா? விவாகரத்து அறிவிப்பு அதிரடி நீக்கம்!

சென்னை: தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட விவாகரத்து அறிவிப்பை நடிகை சமந்தா அதிரடியாக நீக்கி உள்ளார்.

கடந்த ஆண்டு அக்டோபர் 2ம் தேதி நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யா இருவரும் தங்கள் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் இருவரும் பிரிய போவதாக அறிவித்து ஒட்டுமொத்த திரையுலகையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினர்.

இந்நிலையில், நடிகை சமந்தா அந்த போஸ்ட்டை நீக்கி இருப்பது ஏகப்பட்ட சந்தேகங்களை எழுப்பி உள்ளது.

சிக்னல் தந்த சமந்தா

சிக்னல் தந்த சமந்தா

சமந்தா அக்கினேனி என சமூக வலைதள பக்கத்தில் இருந்த தனது பெயரை வெறும் S என மாற்றி முதன் முதலாக இருவரும் பிரிய போவதற்கான சிக்னலை கொடுத்ததே நடிகை சமந்தா தான். நடிகை சமந்தாவும் நாக சைதன்யாவும் விரைவில் விவாகரத்து செய்யப் போவதாக தகவல்கள் பரவிய நிலையில், கடைசியில் அதனை இருவரும் உறுதியும் செய்தனர்.

பிரிய போகிறோம்

பிரிய போகிறோம்

இருவரது அடுத்த கட்ட வளர்ச்சிக்காக குடும்ப வாழ்க்கையில் இருந்து விலகுவதாக கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யா தங்களது சமூக வலைதள பக்கங்களில் இருவரும் ஒரு மனதாக பிரிய போகிறோம் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தனர்.

சமந்தா மீது தான் தவறு

சமந்தா மீது தான் தவறு

நடிகை சமந்தா கணவர் நாக சைதன்யாவின் பெயரை கெடுக்கும் விதமாக வெப் சீரிஸ்கள் மற்றும் படங்களில் அதீத கவர்ச்சி காட்டி நடிப்பது பிடிக்கவில்லை என இருவருக்கும் வாக்கு வாதம் நடந்ததே இருவரும் பிரிய காரணம் எனக் கூறப்பட்டது. மேலும், குழந்தை பெற்றுக் கொள்ள காலம் தாழ்த்துவதாலும் சமந்தா மற்றும் நாக சைதன்யா பிரிய நேரிட்டது உள்ளிட்ட ஏகப்பட்ட யூகங்கள் சமூக வலைதளங்களில் கிளம்பின.

நடிகையுடன் காதல்

நடிகையுடன் காதல்

இன்னொரு பக்கம் நடிகர் நாக சைதன்யா குடும்பத்தில் உள்ள அனைவருமே இரண்டாவது திருமணம் செய்தவர்கள் என்றும் அவரும் இன்னொரு நடிகையை காதலித்து வருவதே இருவரும் பிரிய காரணம் என்றும் நெட்டிசன்கள் கிளப்பிய வதந்திகள் கை கால் முளைத்து நாடு முழுவதும் பரவின. மற்றொரு பக்கம் அப்படியொரு விஷயத்தையே மறந்து விட்டு இருவரும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

விவாகரத்து அறிவிப்பு நீக்கம்

விவாகரத்து அறிவிப்பு நீக்கம்

இந்நிலையில், தற்போது திடீரென நடிகை சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இத்தனை நாட்களாக இருந்து வந்த அந்த விவாகரத்து அறிவிப்பு திடீரென நீக்கப்பட்டுள்ளது ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. பெயரை நீக்கி சிக்னல் தந்ததை போலவே தற்போது விவாகரத்து அறிவிப்பை நீக்கி நடிகை சமந்தா சிக்னல் கொடுக்கிறாரா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.

நாக சைதன்யா நீக்கவில்லை

நாக சைதன்யா நீக்கவில்லை

ஆனால், அதே சமயம் நடிகர் நாக சைதன்யாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்னமும் அந்த விவாகரத்து அறிவிப்பு நீக்கப்படவில்லை. நடிகை சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து முழுமையாக அந்த அறிவிப்பு நீக்கப்பட்டதா? அல்லது Archive செய்யப்பட்டதா? என்பது குறித்த தகவல் இல்லை. விரைவில் இதுதொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் இணைவார்களா?

மீண்டும் இணைவார்களா?

2010ம் ஆண்டு முதல் காதலித்து வந்த இருவரும் 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். 2020ம் ஆண்டு வரை கணவன் மனைவியாக இருந்து வந்த இருவரும் சிறிய மனக் கசப்பு காரணமாகவே இப்படியொரு முடிவெடுத்தனர் என்றும் கூறப்பட்டு வரும் நிலையில், மீண்டும் இருவரும் பழையபடியே இணைய வேண்டும் என்பதே சமந்தா நாக சைதன்யா ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X