அடேங்கப்பா.. அல்லு அர்ஜுன் படத்தில் குத்தாட்டம் போட சமந்தா இத்தனை கோடி கேட்டாரா? வைரலாகும் தகவல்!
ஹைதராபாத்: அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது.
தெலுங்கு திரைப்படமான புஷ்பா தமிழ், இந்தி, மலையாளம் என 5 மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாக காத்திருக்கிறது.
இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வரும் நிலையில் ஒரே ஒரு குத்தாட்ட பாடலுக்காக சமந்தா புக் செய்யப்பட்டுள்ளார்.

விவாகரத்து சர்ச்சை
நடிகர் நாக சைதன்யாவும் நடிகை சமந்தாவும் ஒருவரை ஒருவர் பிரிவதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும், சமந்தா மும்பைக்கு குடியேறி விட்டார் என்றும் இனி ஹைதராபாத்தில் தங்க மாட்டார் என்றும் கூறப்பட்ட நிலையில், ஹைதராபாத் தான் எந்த சொந்த வீடு என சமந்தா சொல்லி இருந்தது குறிப்பிடத்தக்கது.

சமந்தாவின் சகுந்தலம்
தி ஃபேமிலி மேன் 2 வெப்சீரிஸை தொடர்ந்து நடிகை சமந்தாவின் நடிப்பில் அடுத்ததாக சகுந்தலம் திரைப்படம் வெளிவர காத்திருக்கிறது. இயக்குநர் குணசேகர் இயக்கத்தில் காளிதாசர் எழுதிய சகுந்தலா நூலை தழுவி இந்த படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.

புஷ்பாவில் குத்தாட்டம்
சகுந்தலம் படம் தான் சமந்தா தெலுங்கில் நடிக்கப் போகும் கடைசி படம் இனி அவருக்கு அங்கே வாய்ப்புகள் கிடைக்காது என வதந்திகள் கிளம்பிய நிலையில், தற்போது அதிரடியாக அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட சமந்தாவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

ஸ்பெஷல் டான்ஸ்
நயன்தாரா, தமன்னா உள்ளிட்ட முன்னணி நடிகைகள் மற்ற படங்களில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ள நிலையில், முதன் முறையாக நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட போவது இந்த படத்தில் தான் என்பது குறிப்பிடத்தக்கது. புஷ்பா படத்தில் இடம்பெற்றுள்ள 5வது பாடல் ரொம்பவே ஸ்பெஷல் என்பதால் அதில் ஸ்பெஷலாக நடனமாட சமந்தாவிடம் கேட்டோம் அவரும் ஓகே சொல்லி விட்டார் என புஷ்பா படக்குழு தெரிவித்துள்ளது.

இவ்வளவு சம்பளமா?
அல்லு அர்ஜுன் உடன் இணைந்து நடிகை சமந்தா புஷ்பா படத்தில் குத்தாட்டம் போட ரூ.1.5 கோடி சம்பளமாக கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தி ஃபேமிலி மேன் வெப் தொடருக்கு பிறகு நடிகை சமந்தா தனது சம்பளத்தை அதிகளவில் ஏற்றிய நிலையில், ஒரே ஒரு பாடலுக்கு இவ்வளவு தொகை கேட்பதாக வெளியாகி உள்ள தகவல் டோலிவுட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
Recommended Video

ராஷ்மிகாவுக்கு எவ்வளவு
பல முன்னணி நடிகைகள் முழு படத்திற்கு ஒரு கோடி சம்பளம் வாங்குவதையே பெரிய கனவாக நினைத்திருக்கும் நிலையில், சமந்தாவின் மார்க்கெட் இந்த அளவுக்கு உச்சத்தில் இருப்பது சூப்பரான விஷயம் தான். புஷ்பா படத்தில் ஹீரோயினாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனாவுக்கு அப்போ எவ்வளவு சம்பளம் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. ராஷ்மிகா மந்தனா அதிகபட்சமாக 2 முதல் 3 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











