Samantha Marriage: 2வது திருமணம் செய்துகொண்ட சமந்தா.. ஈஷா யோகா மையத்தில் நடந்த ரகசிய திருமணம்!
கோவை: நடிகை சமந்தா பிரபல இயக்குநர் ராஜ் நிடிமோருவை இன்று கோவை ஈஷா யோகா மையத்தில் திருமணம் செய்துகொண்டதாக தகவல்கள் வெளியான நிலையில், சமந்தாவே அதிகாரப்பூர்வமாக திருமண புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட சமந்தா அவரை விவாகரத்து செய்து பிரிந்த நிலையில், நடிகை சோபிதா துலிபாலாவை நாக சைதன்யா திருமணம் செய்துகொண்டு புதிய வாழ்க்கையை தொடங்கினார்.

ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தான தி ஃபேமிலி மேன் இயக்குநர் ராஜ் நிடிமோரு உடன் சமந்தா நெருக்கமாக பழகி வருகிறார் என காதல் கிசுகிசுக்கள் கசிந்து வந்த நிலையில், இன்று இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.
சமந்தா 2வது திருமணம்: சமீபத்தில் பிக் பாஸ் பிரபலமும் நடிகையுமான சம்யுக்தா 2வது திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், தற்போது நடிகை சமந்தாவும் 2வது திருமணம் செய்துகொண்டார். ஈஷா யோகா மையத்தில் டிசம்பர் 1ம் தேதி இன்று காலை சமந்தாவின் திருமணம் நடைபெற்றதாக நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்த நிலையில், அது முற்றிலும் உண்மை என தெரியவந்துள்ளது. நடிகை சமந்தா ஈஷா யோகா மையத்தில் இருந்த தகவல்களும் கசிந்துள்ளன. விரைவில் அவரே அதிகாரப்பூர்வமாக தனது திருமணத்தை அறிவித்துள்ளார்.

வாழ்த்தும் ரசிகர்கள்: சமந்தாவை பிரிந்த நாக சைதன்யா பொன்னியின் செல்வன் நடிகை சோபிதா துலிபாலாவை 2வதாக திருமணம் செய்துகொண்ட நிலையில், நடிகை சமந்தாவும் 2வது திருமணம் செய்து கொண்டது அவரது தனிப்பட்ட விருப்பம். இந்த திருமணம் அவருக்கு நிலைத்து இருக்கட்டும் என ரசிகர்கள் சமந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நாக சைதன்யா உடன் விவாகரத்து: கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி தான் நடிகை சமந்தா நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டார். அதே டிசம்பர் மாதமே தற்போது சுபமுகூர்த்த தினமான இன்று ராஜ் நிடிமோருவை திருமணம் செய்துள்ளதாக கூறுகின்றனர். 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் நாக சைதன்யா மற்றும் சமந்தா இருவரும் மனம் ஒத்து பிரிவதாக அறிவித்தனர். சமந்தா எந்தவொரு ஜீவனாம்சமும் கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜ் நிடிமோருவுடன் காதல்: தி ஃபேமி மேன் சீசன் 2வில் ராஜ் நிடிமோரு இயக்கத்தில் சமந்தா ரொம்பவே ஆபாசமாக நடித்திருந்தார். அப்போதே சமந்தாவுக்கும் - நாக சைதன்யாவுக்கும் இடையே பிரச்சனை வெடித்தது என்றும் அதுதான் இருவரும் பிரிய காரணம் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், அந்த வெப்சீரிஸில் நடிக்கும் போதே சமந்தா - ராஜ் காதலிக்கத் தொடங்கியது தான் சமந்தாவின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிய காரணமா? என்கிற கேள்விகளை ரசிகர்கள் கிளப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











