Samantha: சிட்டாடல் படப்பிடிப்பில் மயங்கி விழுந்த சமந்தா.. பதறிப்போன படக்குழு!
சென்னை: மையோசிடிஸ் என்னும் தோல் வியாதியால் பாதிக்கப்பட்ட சமந்தா, சினிமாவிலிருந்து பிரேக் எடுத்தார். அதன் பின் சாகுந்தலம் படம் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். அடுத்ததாக குஷி படத்தில் நடித்தார். ஆனால் இரண்டு படங்களுமே சரியாக போகவில்லை. இதனையடுத்து குட்டி பிரேக் எடுத்துக்கொண்ட சமந்தா, சிட்டாடல் வெப் சீரிஸின் இந்திய வெர்ஷனில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பின் போது அவர் மயங்கி விழுந்தது தற்போது தெரியவந்துள்ளது.
சென்னை பல்லாவரத்தை சேர்ந்த சமந்தா, சினிமா உலகில் இவ்வளவு உயரம் தொட்டதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. இத்தனைக்கும் அவருக்கு எந்த சினிமா பின்புலமும் இல்லை. பல போராட்டங்களை சந்தித்துதான் இந்த இடத்தை பிடித்திருக்கிறார். அதற்கு அவர் கொடுத்த விலை பெரியது. பல வதந்திகள், விமர்சனத்திற்கு உள்ளாகி மீண்டு வந்த பெண் போராளி என்றுதான் இவரை சொல்ல வேண்டும்.

தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா, சில வருடங்களில் அவரை பிரிந்தார். இந்த விவகாரம் சமூகவலைத்தளங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டது. ஆண் ஆதிக்க சிந்தனையுள்ள பலரும் சமந்தாவை கடுமையாக விமர்சனம் செய்தனர். ஆனால், அது எல்லாவற்றையும் புன்னகையுடன் சமந்தா கடந்தார். விவாகரத்துக்கு இழப்பீடாக பல கோடிகளை நாகார்ஜுனா தரப்பு கொடுக்க முன்வந்த போதும், ஒரு ரூபாய் கூட வேண்டாம் என சொல்லி தன்னம்பிக்கையுடன் தற்போது நடித்து வருகிறார்.
சிட்டாடல்: ஒருபக்கம், தோல் நோயாலும் பாதிக்கப்பட்டிருக்கும் சமந்தா அதற்காக சிகிச்சைகளையும் பெற்று வருகிறார். சமந்தாவால், ஒரு இடத்தில் 30 நிமிடங்களுக்கு மேல் நிற்க முடியாத நிலையில் இருக்கிறார். ஆனாலும், சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது பேமிலி மேன் எடுத்த இயக்குனரின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துள்ளார். இதில் சமந்தாவுடன் வருண் தவான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சிட்டாடல் படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் முடிவடைந்தது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பல வருடங்களாக நடந்து வருகிறது. டப்பிங் முடிந்து ஏப்ரல் அல்லது மே மாதத்தில் இந்த தொடரை வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சண்டை காட்சியில் சமந்தா: இந்த சிட்டாடல் வெப் தொடரில் இடம்பெறும் கடுமையான சண்டை காட்சி ஒன்றில், தனது உடல்நிலை மோசமாக இருக்கிறது என்று தெரிந்தும் டூப் போடாமல் நடித்துள்ளார் சமந்தா. அந்த சண்டை காட்சியை முழுமையாக நடித்து முடித்துவிட்டு, திடீரென சமந்தா மயங்கி விழுந்துவிட்டாராம்.சமந்தா மயக்கம் போட்டு கீழே விழுந்தவுடன் படக்குழுவினர் அனைவரும் அதிர்ச்சியில் பதறிப்போய்விட்டார்களாம். இதன்பின் அவரை மருத்துவமனையில் அனுமதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மயங்கி விழுந்தார்: தன்னுடைய உடல் நிலை சரியில்லை என்று தெரிந்தும் டூப் போடாமல் சமந்தா அந்த சண்டை காட்சியில் நடித்தது மிகப்பெரிய விஷயம் என ரசிகர்கள் சமந்தாவை பாராட்டி வருகிறார்கள். அதே போல் உடல்நலத்தில் கவனம் தேவை என்றும், விரைவில் சமந்தா முழுமையாக குணமடைய வேண்டும் என்றும் அவரது ரசிகர்கள் பிரார்தனை செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











