இரண்டாவது திருமணத்திற்கு ரெடி? பாலிவுட் இயக்குநரை காதலிக்கும் சமந்தா? விவாகரத்து செய்யும் இயக்குநர்!
சென்னை: நாக சைத்தன்யாவிற்கு கடந்த வாரம் சோபிதாவுடன் நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்களின் திருமண தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், நடிகை சமந்தாவும் இரண்டாவது திருமணத்திற்கான தயாராகி விட்டதாகவும், அவர் பாலிவுட் இயக்குநர் ஒருவரை காதலித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையைச் சேர்ந்த பெண்ணான நடிகை சமந்தா, கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்த போது, தன்னுடன் நடந்த, சக நடிகரான நாக சைதன்யாவை காதலித்தார். இதைத்தொடர்ந்து பெற்றோரின் சம்மதத்துடன் இவர்களின் திருமணம் நடைபெற்றது. திருமணமான மூன்று ஆண்டுகளிலேயே இருவரும் பிரிந்துவிட்டனர். இவர்களின் பிரிவுக்கான காரணம் என்ன என்று சொல்லவில்லை,

நடிகை சமந்தா: இந்தியில் வெளியான ஃபேமிலி மேன் 2 வெப்தொடரில் சமந்தா படு கவர்ச்சியாக நடித்திருந்தார். இது நாக சைத்தன்யாவிற்கு பிடிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. சினிமாவில் கவர்ச்சி வேண்டாம் என்று சொன்ன போதும், அவர் கேட்டவில்லை என்றும் இதுதான் அவர்களின் பிரிவுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. சமந்தாவை பிரிந்த நாக சை தன்யா இரண்டே வருடத்தில் நடிகை சோபிதாவை காதலித்து வருவதாகவும் இருவரும் அடிக்கடி டேட்டிங் செல்வதாகவும் சொல்லப்பட்ட நிலையில், கடந்த நாக சைத்தன்யா சோபிதா துபாலிடன் நிச்சயத்தார்த்தம் நடந்தது. இந்த போட்டோக்களை நாகார்ஜுனா தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.
மீண்டும் காதல்: இந்நிலையில், நடிகை சமந்தாவும் இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது. பிரபல பாலிவுட் இயக்குனர் ராஜ் என்பவரை அவர் காதலித்து வருவதாகவும், விரைவில் இவர்கள் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. சமந்தா முதல் முதலில் நடித்த ஃபேமிலி மேன் 2 வெப்தொடரின் இயக்குனர் இவராவார். தற்போதும் சமந்மதா, Citadel: Honey Bunny எனும் மற்றொரு வலைத்தொடரில் நடித்துள்ளார். இதன், படப்பிடிப்பின் போது தான், ராஜுடன் சமந்தாவிற்கு காதல் மலர்ந்தாக கூறப்படுகிறது.

ஏற்கனவே திருமணமானவர்: ஆனால், அந்த பாலிவுட் இயக்குனர் ராஜ் ஏற்கனவே திருமணம் ஆனவராம், சமந்தா உடனான காதலால் விரைவில் அவர் தன்னுடைய மனைவியை விவாகரத்துத் செய்ய இருப்பதாதகவும் சொல்லப்படுகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால், பாலிவுட் மீடியாக்களில் இப்படியொரு விவகாரமான செய்து காட்டுத் தீ போல பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











