இப்பதானே மீட் பண்ணினாங்க.. நடிகை சமந்தாவின் நெருங்கிய தோழிக்கு கொரோனா.. ரசிகர்கள் திடீர் கவலை!
சென்னை: பிரபல நடிகையின் தோழிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட பின், ஐதராபாத்தில் வசித்து வருகிறார்.
திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வரும் சமந்தா, கடைசியாக தமிழில் ஹிட்டான 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்திருந்தார்.

காத்துவாக்குல
விஜய் சேதுபதி நடித்த கேரக்டரில் ஷர்வானந்தும், த்ரிஷா கேரக்டரில் சமந்தாவும் நடித்திருந்தனர். தமிழில் இயக்கிய பிரேம்குமார், தெலுங்கிலும் இயக்கினார். இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் அப்செட் ஆன சமந்தா, இப்போது அஸ்வின் சரவணன் இயக்கும் ஹாரார் படத்திலும் விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்திலும் நடிக்க இருக்கிறார்.

காணாமல் போனார்
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை சமந்தா இடையில் சில நாட்கள் காணாமல் போனார். இதனால் அவர் பற்றி வதந்திகள் பரவியது. அவருக்கும் கணவர் குடும்பத்துக்கும் பிரச்னை என்றும் அதனால்தான் அவர் சோசியல் மீடியா பக்கம் வரவில்லை என்று கூறப்பட்டது. இது பரபரப்பானது.

முற்றுப்புள்ளி
இந்நிலையில், அவரது பிறந்தநாள் ஏப்ரல் மாதம் கொண்டாடப்பட்டது. அப்போது, கணவர் நாக சைதன்யா செய்த கேக்குடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். தற்போது மீண்டும் ஆக்டிவாக இருக்கும் அவர், தொடர்ந்து போட்டோக்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்.

நெருங்கிய தோழி
இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன், தனது நெருங்கிய தோழி, பேஷன் டிசைனர் ஷில்பா ரெட்டி வளர்க்கும் நாய்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும் வீடியோவை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவை ஷில்பா ரெட்டி எடுத்திருந்தார். இதை ஷில்பாவும் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவில் நாய்கள், சமந்தாவுடன் விளையாடுகின்றன.

அழுத்தமாக முத்தம்
அவர் சிரித்தபடி இருக்கிறார். இன்னொரு போட்டோவில் ஷில்பா ரெட்டியின் கன்னத்தில் அழுத்தமாக முத்தம் கொடுக்கிறார் நடிகை சமந்தா. வைரலான இந்த வீடியோவும் போட்டோவும் எப்போது எடுக்கப்பட்டது என தெரியவில்லை. ஆனால், சமீபத்தில் எடுக்கப்பட்டதுதான் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், ஷில்பா ரெட்டி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
Recommended Video

ரசிகர்கள் கவலை
கொரோனா பரிசோதனையில் அவருக்கு பாசிட்டிவ் என தெரியவந்துள்ளது. இதை அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து நடிகை சமந்தா ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன், ஷில்பாவுக்கு முத்தம் கொடுக்கும் போட்டோவை சமந்தா வெளியிட்டிருந்ததால், அவருக்கும் கொரோனா தொற்று பரவி இருக்குமோ என்று ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











