அதிர்ச்சி.. நடிகை சமந்தாவின் தந்தை காலமானார்.. மனமுடைந்து கதறிய மகள்.. ரசிகர்கள் ஆறுதல்
சென்னை: நடிகை சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். தனது தந்தையின் மரணம் குறித்து நடிகை சமந்தா சற்றுமுன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் போஸ்ட் ஒன்றை போட்ட நிலையில், அவருக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.
நடிகை சமந்தாவின் வாழ்க்கையில் கடந்த சில காலமாக தொடர்ந்து ஏகப்பட்ட சோக சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், அனைத்துக்கும் மேலாக அவருடைய அப்பாவின் மரணம் அவரை ஒட்டுமொத்தமாக முடக்கிவிட்டது.

ஒரு பக்கம் சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா மறுமணம் செய்துக் கொள்ள உள்ள நிலையில், அவரது வீடு சுப நிகழ்ச்சி நடக்கும் வீடாக மாறியுள்ள நிலையில், இன்னொரு பக்கம் சமந்தாவின் வீட்டில் இப்படியொரு சோக நிகழ்வு நடந்துள்ளதே என ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
பல்லாவரம் பொண்ணு: இந்தியளவில் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்துள்ள நடிகை சமந்தா சென்னை பல்லாவரத்தை சேர்ந்தவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து ஆந்திரா மருமகளாக மாறிய நிலையில், விவாகரத்து நடைபெற்று மீண்டும் சென்னை பொண்ணாகவே சமந்தா மாறிவிட்டார். சிறு வயதில் இருந்தே சமந்தாவை போல்டாக வளர்த்த அவருடைய தந்தை ஜோசப் பிரபுவின் மறைவு சமந்தாவை ரொம்பவே பாதித்துள்ளது.
சமந்தா தந்தை காலமானார்: தெலுங்கு - ஆங்கிலோ இந்தியனான ஜோசப் பிரபு உடல் நலக்குறைவு காரணமாக இன்று திடீரென உயிரிழந்துள்ளார். நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில், அதை குறிக்கும் விதமாக, 'Until we meet again Dad' என உடைந்த ஹார்ட் எமோஜியுடன் போஸ்ட் ஒன்றை பதிவிட்டு "மீண்டும் நாம் சந்திக்கும் வரை என்னுடைய இதயம் உடைந்திருக்கும் அப்பா" என மனமுடைந்து பதிவிட்டுள்ளார் நடிகை சமந்தா.

ரசிகர்கள் ஆறுதல்: நடிகை சமந்தா தனது தந்தையை இழந்துள்ள நிலையில், ஸ்ட்ராங்காக இருங்க அக்கா, உங்க மன வலிமையை இழந்து விடாதீர்கள் என பதிவிட்டு ஆறுதல் கூறி வருகின்றனர். சமந்தாவின் தந்தை உயிரிழந்த தகவலை அறிந்த சினிமா பிரபலங்கள் மற்றும் நண்பர்கள் என பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நாக சைதன்யா அஞ்சலி செலுத்துவாரா?: தனது முன்னாள் மாமனார் உயிரிழந்த நிலையில், நடிகர் நாக சைதன்யா சமந்தாவுக்கு நேரில் சென்று ஆறுதல் சொல்வாரா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. ஆனால், ஹல்தி, சங்கீத் கொண்டாட்டங்கள் என திருமணக் கொண்டாட்டத்தில் அவர் இருக்கும் நிலையில், வரவாய்ப்பில்லை என்றே தெரிகிறது. நடிகர் நாகார்ஜுனா நேரில் சென்று சமந்தாவுக்கு ஆறுதல் சொல்ல வேண்டும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











