டைவர்ஸுக்கு பிறகு டேட்டிங்கா?.. ரசிகை வைத்த கோரிக்கை - சமந்தா அளித்த அட்டகாசமான பதில்
சென்னை: யாரையாவது டேட் செய்யுங்களேன் என ரசிகை ஒருவர் வைத்த கோரிக்கைக்கு சமந்தா அளித்திருக்கும் பதில் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
சென்னையை பூர்வீகமாகக் கொண்ட சமந்தா தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர். அவர் தற்போது சாகுந்தலம், குஷி ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இரண்டு படங்களும் விரைவில் வெளியாகவிருக்கின்றன.

நாக சைதன்யாவுடன் திருமணம்
தமிழில் மாஸ்கோவின் காவிரி படம் மூலம் அறிமுகமான சமந்தா அதன் பிறகு விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். தொடர்ந்து தெலுங்குக்கு சென்ற அவர் அங்கும் சிறப்பாக நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார். விண்ணைத்தாண்டி வருவாயா ரீமேக்கில் நடிக்கும்போது நாக சைதன்யாவை காதலித்தனர். இருவருக்கும் கோவாவில் கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

பிரிவில் முடிந்த திருமண உறவு
திருமணத்திற்கு பிறகும் சமந்தா நடிப்பில் கவனம் செலுத்திவந்தார். நாக சைதன்யாவுக்கும், சமந்தாவுக்கும் இடையே திருமணம் வாழ்க்கையும் நன்றாக போய்க்கொண்டிருந்தது. ஆனால் யார் கண்பட்டதோ தெரியவில்லை சில வருடங்களுக்கு முன் இருவரும் பிரிவதாக தங்களது சமூக வலைதள பக்கங்களின் மூலமாக அறிவித்தனர். ஆனால் எதற்காக பிரிந்தார்கள் என்பதை இருவருமே அறிவிக்கவில்லை. அவர்களது விவாகரத்து ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

நோயோடு போராடி மீண்ட சமந்தா
திருமண பந்தம் முடிவுக்கு வந்த பிறகு சமந்தா பல படங்களில் கமிட்டானார். புஷ்பா படத்தில் அவர் ஆடிய நடனம் அனைவரையும் ரசிக்க வைத்தது. அதுமட்டுமின்றி ஹாலிவுட் படத்திலும் நடிப்பதற்கு கமிட்டாகியிருக்கிறார். சூழல் இப்படி இருக்க அவருக்கு மையோசிடிஸ் எனும் தோல் நோய் வந்தது. அந்த நோய்க்காக பல மாதங்கள் தீவிர சிகிச்சை எடுத்துக்கொண்ட அவர் அந்த நோயிலிருந்து மீண்டு சினிமாவில் நடிப்பதில் மும்முரமாக இருக்கிறார்.

ரசிகையின் கோரிக்கை; சமந்தாவின் அட்டகாச பதில்
இந்நிலையில் ட்விட்டரில் ரசிகை ஒருவர், யாரையாவது டேட் செய்யுங்களேன் சமந்தா என்று கோரிக்கை வைத்தார். அதற்கு பதிலளித்த சமந்தா, உங்களைப் போல் என் மேல் வேறு யார் அன்பு வைப்பார்கள் என குறிப்பிட்டிருக்கிறார். அவரது இந்த பதில் ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

நடிப்பில் மும்முரம் காட்டும் சமந்தா
சமந்தா தற்போது சாகுந்தலம் மற்றும் குஷி ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இதில் சாகுந்தலம் படம் ஏப்ரல் 14ஆம் தேதியும், குஷி படம் செப்டம்பர் 1ஆம் தேதியும் ரிலீஸ் ஆகிறது. படங்கள் தவிரித்து ஃபேமிலி மேன்,ஃபர்ஸி வெப் சீரிஸ்களை இயக்கி புகழடைந்த ராஜ் மற்றும் டிகே ஆகியோரின் இயக்கத்தில் சிடாடல் என்ற வெப் சீரிஸில் நடிப்பதற்கும் கமிட்டாகியிருக்கிறார் சமந்தா.


Click it and Unblock the Notifications











