Don't Miss!
- News
லட்டு எல்லாம் பழசு.. பிரசாதமாக "பர்கர், சாண்ட்விச்" தரும் சென்னை கோயில் -இன்னும் பல விசயம் இருக்கு
- Sports
"ஒரே கல்லில் 2 மாங்காய்" ஒரே இன்னிங்ஸில் தோனி - சச்சின் சாதனை தகர்த்த ரிஷப் பண்ட்.. எப்படி தெரியுமா
- Finance
ஒரு கப் டீ 20, சேவை கட்டணம் ரூ.50.. மொத்த கட்டணம் ரூ.70.. சதாப்தி ரயில் பயணிகள் ஷாக்!
- Automobiles
டாடாவிற்கு பக்கத்துல கூட யாரும் வர முடியாது! மாருதிலாம் சீன்லயே இல்ல! விஷயத்தை கேக்கும்போதே ஆச்சரியமா இருக்கு!
- Lifestyle
இந்த வயசுக்கு மேல ஆண்களுக்கு இதய நோய் மற்றும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு ரொம்ப அதிகமாம்.. ஜாக்கிரதை!
- Technology
Samsung: கொஞ்ச காசு இப்போ கட்டுங்க, மிச்சம் 12 மாசம் கழிச்சு கொடுங்க.. ஸ்மார்ட்TV மீது சலுகை!
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
நாக சைதன்யா டேட்டிங் விவகாரம்.. பொங்கி எழுந்த சமந்தா.. இப்படியொரு ட்வீட் போட்டு இருக்காரே?
சென்னை: நாக சைதன்யா மற்றும் நடிகை சமந்தா இருவரும் ஒருவரை ஒருவர் பிரிவதாக அறிவித்ததில் இருந்தே ஏகப்பட்ட சிக்கலில் சமந்தா சிக்கி வருகிறார்.
நடிகை சமந்தா பற்றிய அவதூறு கருத்துக்கள் பல யூடியூப்களிலும், சோஷியல் மீடியாவிலும் பரவி வந்தன.
அதையெல்லாம் தாங்கிக் கொண்டு அமைதியாக இருந்து வந்த சமந்தா தற்போது நாக சைதன்யா இன்னொரு நடிகையுடன் டேட்டிங் செல்கிறார் என்கிற விவகாரம் பரவிய நிலையில், பொங்கி எழுந்துள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டிவி சீரியல் நடிகை தற்கொலை...காதலனிடம் போலீசார் விசாரணை!

சமந்தா விவாகரத்து
டோலிவுட் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா திடீரென தனது சோஷியல் மீடியா பக்கத்தில் அக்கினேனி பெயரை தூக்கினார். அப்போதே இருவருக்கும் இடையே மோதல்கள் ஆரம்பித்தன. பின்னர், இருவரும் ஒருமனதாக பிரிவதாக அறிவித்து அதிர்ச்சி அளித்தனர்.

சமந்தாவை சுற்றிய வதந்திகள்
குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதவர் சமந்தா என்றும், ஆபாசமாக தி ஃபேமிலி மேன் 2 வெப்சீரிஸில் நடித்தார் என்றும், இன்னொரு நடிகருடன் சமந்தாவுக்கு தொடர்பு இருப்பது தான் இந்த விவாகரத்துக்கு காரணம் என ஏகப்பட்ட வதந்திகள் சமந்தாவை சுற்றி வந்தன. ஆனால், அதையெல்லாம் மன வலிமையுடன் தாங்கி கடந்து வந்தார் சமந்தா.

நடிகையுடன் டேட்டிங்
இந்நிலையில், தற்போது நடிகர் நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவுடன் டேட்டிங் செய்து வருகிறார் என இருவரும் அடிக்கடி வெளியே சுற்றி வரும் விவகாரங்கள் வெளியான நிலையில், அதுபற்றிய வதந்தி வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், நடிகை சமந்தாவை இந்த விவகாரம் பயங்கரமாக கோபத்தில் ஆழ்த்தி உள்ளது.

சமந்தா தான் காரணம்
நடிகர் நாக சைதன்யாவை பற்றிய வதந்தி இப்படி வெளியாக காரணமே சமந்தாவின் பிஆர் டீம் தான் நாக சைதன்யாவின் ரசிகர்கள் கிளப்பி விட்டதும் தான் சமந்தா சாந்தமாக இல்லாமல் சாமி ஆடி இருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள ட்வீட் தற்போது அனைவரையும் ஷாக் ஆக்கி உள்ளது.

நான் காரணமா
பெண்கள் பற்றிய வதந்தி வந்தால் அது அப்படியே உண்மை என நம்புகின்றனர். இதே ஒரு ஆணை பற்றிய வதந்தி வெளியானால், அதற்கு காரணமும் பாதிக்கப்பட்ட அந்த பெண் தான் என எப்படித்தான் பேசுகிறார்களோ? என தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் போட்டு வெளுத்து வாங்கி இருக்கிறார் சமந்தா.

ரசிகர்கள் ஆதரவு
நடிகை சமந்தா இப்படி கோபத்துடன் ஒரு ட்வீட் போட்டுள்ள நிலையில், தூற்றுவார் தூற்றட்டும்.. போற்றுவார் போற்றட்டும்.. நீங்க இதுக்கெல்லாம் சங்கடப்பட வேண்டாம் சமந்தா, உங்களுக்கு எப்போதுமே நாங்க உறுதுணையாக இருப்போம் என சமந்தாவுக்கு ஆதரவாக ரசிகர்கள் கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.