சர்ப்ரைஸ் கொடுத்த சமந்தா...பதிலுக்கு ஷாக் கொடுத்த பவித்ர லட்சுமி
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு மிகவும் பிரபலமாகி விட்டார் பவித்ர லட்சுமி. அதிலும் சமூக வலைதளங்களில் இவர் பதிவிடும் ஃபோட்டோக்கள் லைக் செய்து, கமெண்ட் செய்வதற்கே ஒரு கூட்டம் காத்துக் கொண்டிருக்கிறது.
தற்போது ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் தயாரிக்கும் புதிய படம் ஒன்றில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். காமெடி நடிகர் சதீஷ், முதல் முறையாக ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் நாய் ஒன்றும் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளதாம்.

சர்ப்ரைஸ் கொடுத்த சமந்தா
பவித்ர லட்சுமியின் இந்த பதிவை பார்த்த, சமந்தாவும், நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க என புகழ்ந்து, பதிவிட்டுள்ளார். அதற்கு பவித்ராவும், நிஜமாகவே நான் உங்களை போலவே இருக்கேனா. நீங்க எப்போதும் என் ஃபேவரைட் என பதில் போட்டுள்ளார்.

ஷாக் கொடுத்த பவித்ர லட்சுமி
ஆனால் சமந்தாவை போன்ற கெட்அப்பில் இருக்கும் தனது ஃபோட்டோவை தான் வெளியிடவில்லை என கூறி அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார் பவித்ர லட்சுமி. அது தன் பெயரில் இருக்கும் போலி கணக்கு எனக்கும் பவித்ரா தெரிவித்துள்ளார்.

இருந்தாலும் பரவாயில்லை
இருந்தாலும் முன்னணி நடிகையான சமந்தா, தன்னை பாராட்டி பதிவிட்ட கருத்திற்கு பவித்ரலட்சுமி நன்றி தெரிவித்துள்ளார். அதில் அவர், உங்களின் கனிவான பாராட்டிற்கு கோடான கோடி நன்றி. இந்த ஃபோட்டோஷூட்டை உங்களை போலவே உருவாக்கியவர் மித்ரா. ஆனால் நாங்கள் அனைவரும் உங்களின் மிகப் பெரிய ரசிகர்கள்.
Recommended Video

என் பெயரில் போலி கணக்கு
ஆனால், உங்களை பற்றி ஒரு சதவீதம் கூட எனக்கு தெரியாது. நீங்கள் மிகவும் திறமையானர். நீங்கள் பாராட்டி பதில் பதிவிட்டது உண்மையில் என்னுடைய கணக்கு அல்ல. உங்களின் பாராட்டிற்கு நன்றி என தெரிவித்துள்ளார். பவித்ர லட்சுமியின் இந்த பதிலால் சமந்தா மட்டுமின்றி, பவித்ராவின் ரசிகர்களும் அதிர்ச்சியில் வாயடைத்து போய் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











