சமந்தா பூதசுத்தி விவாஹா முறையில் திருமணம் செய்ய என்ன காரணம்? வைர மோதிரத்தை பரிசளித்த கணவர்
சென்னை: நடிகை சமந்தா ரூத் பிரபு மற்றும் திரைப்பட இயக்குநர் ராஜ் நிடிமொரு ஆகியோரின் திருமணம், கோவை ஈஷா யோகா மையத்தில் அமைந்துள்ள லிங்க பைரவி தேவி சன்னிதியில் இன்று காலை பூதசுத்தி விவாஹா முறையில் சிறப்பாக நடைபெற்றது. இந்தத் திருமணத்தில், நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்துகொண்டனர்.
நடிகை சமந்தா தெலுங்கில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ரீமேக்கில் நடித்துக் கொண்டிருந்தபோது அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நாக சைதன்யா நடித்திருந்தார். இதையடுத்து, இருவரும் காதலித்த நிலையில்,2017 ஆம் ஆண்டு கோவாவில் இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின் சமந்தா தொடர்ந்து நடித்து வந்த நிலையில், இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
நடிகை சமந்தா: சமந்தாவை விவாகரத்து செய்த நாக சைதன்யா, நடிகை துலிபாலாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து, சமந்தா, இயக்குநர் ராஜூடன் இருக்கும் போட்டோவை இணைத்தில் பகிர்ந்து வந்தார். இதனால், இருவரும் காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்த நிலையில், இன்று இருவரும் கோவை ஈஷா யோக மையத்தில் திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளியான நிலையில், அதை உறுதிப்படுத்தும் வகையில் சமந்தா, திருமண போட்டோவை இணையத்தில் பதிவிட்டு திருமணத்தை உறுதிப்படுத்தினார்.

பூதசுத்தி விவாஹா: சமந்தா, இயக்குநர் ராஜ் நிடிமொரு திருமணம், லிங்க பைரவி தேவி சன்னிதியில் பூதசுத்தி விவாஹா முறையில் சிறப்பாக நடந்துள்ளது. லிங்க பைரவி சன்னிதிகளிலோ அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களிலோ வழங்கப்படும் 'பூத சுத்தி விவாஹா' திருமண செயல்முறை, தம்பதியருக்கு இடையில் ஆழமான பிணைப்பை ஏற்படுத்தும் யோக விஞ்ஞானத்துடன் நடக்கக்கூடிய திருமணமாகும். இந்தச் செயல்முறையின் மூலம், பஞ்சபூதங்கள் சுத்திகரிக்கப்பட்டு, இருவருக்குமான திருமண உறவு பிரதிஷ்டை செய்யப்படுகிறது. மேலும் தம்பதியர் தங்களது எண்ணம், உணர்ச்சி மற்றும் உடல் தாண்டிய சங்கமத்தை உணர்வதற்கான சாத்தியத்தை பூதசுத்தி விவாஹா வழங்குகிறது. ஈஷா யோகா மையத்தில் சத்குருவால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கபைரவி தேவி, பெண்தன்மையின் சக்திமிக்க வெளிப்பாடாகும். லிங்க பைரவி வளாகம் மக்களின் வாழ்வை வளமாக்கும் சடங்காகும். ஒருவரின் பிறப்பு முதல் இறப்பு வரை, வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் தேவியின் அருளைப் பெறும் வகையிலான சடங்குகள் இங்கு நடைபெறுகிறது.
வைர மோதிரம்: இந்த திருமணத்தின் போது, சமந்தா சிவப்புநிறத்தில் நன்றாக வேலை பாடு செய்யப்பட்ட புடவையை அணிந்து இருந்தார். அதோடு கொண்டை போட்டு தலையில் மல்லிப்பூ வைத்து, அந்த புடவைக்கு எடுப்பாக கழுத்தில் நல்ல ஆபரணத்தை அணிந்து இருந்தார். கையில் அழகான மருதாணி வைத்து இருந்தார். அந்த மருதாணியை விட சமந்தா அணிந்து இருந்த மோதிரம் அனைவரின் கண்ணை பறித்தது. அந்த வைரமோதிரத்தின் மதிப்பு ஒரு கோடி ரூபாய் மதிப்புடைய வைர மோதிரம் என்று நகை மதிப்பீட்டார்கள் கூறியுள்ளனர். மேலும், இது 'கொல்கொண்டா வைரம்' என்றும், பழங்கால பாரம்பரியதை கொண்டது என்றும், முகாலயர்கள் காலத்தில் பல மன்னர்கள் அந்த மோதிரத்தை தான் பயன்படுத்தியதாக சொல்லப்படுகிறது. தனது காதல் மனைவி சமந்தாவிற்கு ராஜ் விலை மதிப்பில்லாத ஒரு பொருளை பரிசாக கொடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











