For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  Top 10 Pan India Actresses: இந்த ஏரியா அந்த ஏரியா இல்ல… ஆல் ஏரியாஸ்லயும் சமந்தா தான் டாப்!

  |

  சென்னை: தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா அடுத்தடுத்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

  நாக சைத்தன்யாவை பிரிந்த பின்னர் தனிக்காட்டு ராஜாவாகிவிட்ட சமந்தா துணிச்சலான கேரக்டர்களிலும் தனது திறமையை நிரூபித்து வருகிறார்.

  நடிப்பு, ஆக்சன், ரொமான்ஸ், க்ளாமர், ஐட்டம் சாங் என அனைத்து ஏரியாவிலும் அதிரடி காட்டுகிறார் சமந்தா.

  செம க்யூட்டா பேசும் நயன்தாரா..நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட புதிய ப்ரோமோ.. திருமண வீடியோ விரைவில்!செம க்யூட்டா பேசும் நயன்தாரா..நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட புதிய ப்ரோமோ.. திருமண வீடியோ விரைவில்!

  தமிழ், தெலுங்கில் செம்ம மாஸ்

  தமிழ், தெலுங்கில் செம்ம மாஸ்

  தமிழில் கவுதம் மேனன் இயக்கத்தில் 2010ல் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா சூப்பர் ஹிட் அடித்தது. சிம்பு, த்ரிஷா, கவுதம் மேனன், ஏஆர் ரஹ்மான் கூட்டணியில் வெளியான இந்தப் படம், தெலுங்கில் Ye Maaya Chesave என்ற பெயரில் ரீமேக் ஆனது. இந்தப் படத்தின் தமிழ் வெர்ஷனில் கெஸ்ட் ரோலிலும், தெலுங்கு ரீமேக்கில் ஹீரோயினாகவும் அடியெடுத்து வைத்தார் நம்ம சென்னை பொண்ணு சமந்தா. ஒரேநேரத்தில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் அறிமுகமான சமந்தா, அதேவேகத்தில் முன்னணி நடிகையாக மாஸ் காட்டத் தொடங்கினார்.

  பாலிவுட்டிலும் அசத்தல் என்ட்ரி

  பாலிவுட்டிலும் அசத்தல் என்ட்ரி

  தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த சமந்தா, ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் அதிக கவனம் செலுத்தினார். விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ், விஷால் ஆகியோரின் ஃபேவரைட் நடிகைகளில் ஒருவராக கோலிவுட்டை அதிர வைத்த சமந்தாவுக்கு பாலிவுட்டிலும் வாய்ப்புகள் கிடைத்தன. ஒருபக்கம் நாக சைத்தன்யாவுடன் திருமண வாழ்க்கை, இன்னொரு பக்கம் கேரியரில் ஸ்மார்ட்டாக உச்சம் தொட்டார். இந்தியில் வெளியான ஃபேமிலி மேன் வெப் சீரிஸ், ஒரேநேரத்தில் பாலிவுட், ஓடிடி ரசிகர்கள் என எல்லா பக்கமும் சமந்தாவை கொண்டு சேர்த்தது.

  கவர்ச்சி ரூட்டுக்கு மாறிய சாம்

  கவர்ச்சி ரூட்டுக்கு மாறிய சாம்

  ஒருகட்டத்தில் நாக சைத்தன்யாவுக்கும் சமந்தாவுக்கு ஒத்துவராமல் போக, இருவரும் பிரிவதாக அறிவித்தனர். அடுத்த நொடியில் இருந்தே இன்னும் வேற லெவலுக்கு தன்னை மாற்றிக் கொண்ட சமந்தா, கவர்ச்சியிலும் சும்மா இறங்கி அடித்தார். அதனால், சமந்தாவுக்கான ரசிகர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே தான் சென்றது. முக்கியமாக 'புஷ்பா' படத்தில் அல்லு அர்ஜுனுடன் "ஊ சொல்றியா மாமா' பாடலுக்கு ஆட்டம் போட்டு, ரசிகர்களை அநியாயத்துக்கு சூடேற்றினார். இதனால், சமந்தாவின் மார்க்கெட் இன்னும் உச்சம் சென்றது.

  டாப் 10ல் சமந்தா தான் முதலிடம்

  டாப் 10ல் சமந்தா தான் முதலிடம்

  இந்நிலையில், பிரபலமாக உள்ள பான் இந்தியா நடிகைகள் குறித்து கருத்து கணிப்பு சமீபத்தில் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் பிரபலமான 10 நடிகைகள் பட்டியலில் சமந்தா தான் முதல் இடத்தை பிடித்துள்ளார். இந்தச் சாதனையை சமந்தா ரசிகர்கள் ட்ரெண்டு செய்து வருகிறார்கள். சமந்தாவை தொடர்ந்து பாலிவுட் நடிகை ஆலியாபட், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, காஜல் அகர்வால், தீபிகா படுகோனே, ராஷ்மிகா மந்தனா, கீர்த்தி சுரேஷ், கத்ரினா கைப், பூஜா ஹெக்டே, அனுஷ்கா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

  English summary
  A poll was conducted on the most famous actresses among fans in India. Among them, Pan India actress Samantha is at the top. Alia Bhatt, Nayanthara, and Kajal Aggarwal are following her. Samantha has also received a good response from Bollywood fans by acting in the Family Man web series.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X