Samantha - நாக சைதன்யாவை பிரிந்ததற்கு இதுதான் காரணமா?.. சமந்தாவே சொன்ன ஷாக் நியூஸ்.. டாப் சீக்ரெட்
சென்னை: நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். தற்போது சினிமாவிலிருந்து குட்டி பிரேக் எடுத்திருக்கும் அவர் மீண்டும் சினிமாவில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அநேகமாக ஹிந்தியில் சல்மான் கானுடன் அவர் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த சூழலில் ரசிகர் ஒருவர் அவரிடம் எழுப்பிய கேள்விக்கு அவர் அளித்த பதில் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
சென்னை பல்லாவரத்தை சேர்ந்தவர் சமந்தா. தமிழில் அறிமுகமாகி சூர்யா, விக்ரம், விஜய் என பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த அவர் தெலுங்கிலும் நடிக்க ஆரம்பித்தார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தபோது அப்படத்தில் ஹீரோவாக நடித்த நாக சைதன்யாவை காதலித்தார். சில வருடங்கள் காதலித்த அவர்கள் இரு வீட்டார் சம்மதுத்தடன் திருமணம், செய்துகொண்டனர். திருமணத்துக்கு பிறகும் சமந்தா தொடர்ந்து நடிப்பில் தீவிர கவனம் செலுத்தினார்.

விவாகரத்து: சுமூகமாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை பிரிவில் முடிந்தது. இருவரும் பரஸ்பரமாக பேசி முடிவெடுத்து பிரிந்துவிட்டார்கள். திருமணத்துக்கு பிறகு சமந்தா நடித்ததால்தான் இருவரும் பிரிந்துவிட்டார்கள் என்று தொடர்ந்து கூறப்பட்டது. ஆனால் எதற்காக பிரிந்தோம் என்பதை இருவருமே வெளியில் சொல்லவில்லை. திருமண உறவிலிருந்து வெளியேறிய சமந்தா அதனைத் தொடர்ந்து முன்னெப்போதும் இல்லாத அளவு கவர்ச்சி காண்பித்து நடிக்க ஆரம்பித்தார்.
மையோசிடிஸ்: புஷ்பா படத்தில் அவர் ஆடிய ஆட்டம் பலரையும் கவர்ந்தது. தொடர்ந்து பல படங்களில் நடிப்பதற்கு அவர் கமிட்டான சூழலில் மையோசிடிஸ் நோய் அவருக்கு வந்தது. இதன் காரணமாக பல மாதங்கள் தொடர்ந்து சிகிச்சை எடுத்துவந்தார். ஒருவழியாக நோயிலிருந்து மீண்ட அவர் சாகுந்தலம் படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். ஆனால் அந்தப் படம் படுதோல்வியடைந்தது. அவரது கரியரிலேயே மோசமான தோல்வி படமாக அந்தப் படம் அமைந்துவிட்டது.
குட்டி பிரேக்: சாகுந்தலம் படத்துக்கு பிறகு விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்தில் நடித்தார். அந்தப் படமும் போதிய வரவேற்பை பெறவில்லை. இதற்கிடையே சினிமாவிலிருந்து குட்டி பிரேக் எடுப்பதாக கூறி தற்போது விலகியிருக்கிறார். கடந்த சில மாதங்களாக நடிக்காமல் இருக்கும் அவர் மீண்டும் விரைவில் நடிக்கவிருக்கிறார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் சமந்தா ரசிகர் ஒருவரின் கேள்விக்கு அளித்திருக்கும் பதில் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
என்ன கேள்வி?: அதாவது அவரிடம், 'தனிப்பட்ட வளர்ச்சியை ஒரு ரீலாக மாற்ற விரும்பினால், நீங்கள் ப்ளூப்பராக எதை நினைத்து சிரிப்பீர்கள்? வாழ்க்கையில் நீங்கள் கற்றுக்கொண்ட பெரிய விஷயம் என்ன' என்ற கேள்வியை ரசிகர் கேட்டார். அதற்கு பதிலளித்த சமந்தா, "எனது விருப்பு வெறுப்புகளை அறியாமல் இருந்ததுதான் எனது வாழ்வில் நான் செய்த மிகப்பெரிய தவறு. அப்போது எனக்கு இருந்த துணையின் தாக்கம் என்னை அதிக அளவு பாதித்தது.
மிகக் கடினமான நேரத்திலும் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான பாடம் ஒன்று இருக்கிறது என்பதை நான் உணர்ந்தபோதுதான் நான் தனிப்பட்ட வளர்ச்சியை பெற்றேன்" என்று குறிப்பிட்டார். சமந்தாவின் இந்த பதிலை பார்த்த ரசிகர்கள், துணையின் தாக்கம் என்னை அதிக அளவு பாதித்தது என்று சமந்தா சொல்லியிருப்பதன் மூலம் தன்னை நாக சைதன்யா முழுக்க முழுக்க கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் என்பதை மறைமுகமாக சொல்கிறாரா. இதனால்தான் அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டார்களோ என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்ப ஆரம்பித்திருக்கின்றனர்.
முன்னதாக, திருமணத்துக்கு பிறகு சமந்தா நடித்த ஃபேமிலி மேன் 2 வெப் சீரிஸில் சில நெருக்கமான காட்சிகளில் நடித்திருந்தார். அது நாக சைதன்யா குடும்பத்துக்கு பிடிக்கவில்லை. அதனால்தான் நாக சைதன்யா - சமந்தா பிரிந்துவிட்டார்கள் என்று ஒரு தகவல் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











