அய்யோ ஆளை விடுங்க.. புஷ்பா 2வுக்கு நோ சொன்ன சமந்தா?.. இதுதான் காரணமா?

சென்னை: புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் நடனத்தில் கலக்கிய சமந்தா அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கு நோ சொல்லிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட சமந்தா தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் வெற்றிக்கொடி நாட்டியவர். அங்கு நடித்தபோது நாகார்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவீட்டார் சம்மதத்துடன் பிரமாண்டமாக அவர்களது திருமணம் நடந்தது.

பிரிவில் முடிந்த திருமண உறவு

பிரிவில் முடிந்த திருமண உறவு

ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை சிறப்பாக சென்றுகொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை திடீரென பிரிவில் முடிந்தது. இருவரும் பரஸ்பரமாக விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இவர்களது பிரிவு செய்தி ஒட்டுமொத்த திரையுலகிலும் பேச்சுபொருளாக மாறியது. திருமணத்திற்கு பிறகு சமந்தா தொடர்ந்து நடித்ததுதான் இருவரும் பிரிந்ததற்கு காரணம் என பல காரணங்கள் கூறப்பட்டன.

கேரியரின் உச்சத்துக்கு சென்ற சமந்தா

கேரியரின் உச்சத்துக்கு சென்ற சமந்தா

திருமண வாழ்க்கை முடிந்துவிட்டதால் இனி சமந்தாவால் திரைப்படங்களில் கவனம் செலுத்த முடியாது. எனவே சமந்தா எனும் நடிகையின் கதை முடிந்துவிட்டதாக பலரும் ஆரூடம் கூறினர். ஆனால் அவர்களது பேச்சை அடித்து நொறுக்கும்படி சமந்தா கோலிவுட், ஹாலிவுட் என றெக்கை கட்டி பறந்தார்.

கிறுகிறுக்க வைத்த சமந்தா

கிறுகிறுக்க வைத்த சமந்தா

முக்கியமாக அல்லு அர்ஜுன் நடிப்பில் 2021ஆம் ஆண்டு வெளியான புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு சமந்தா நடனமாடியது சென்சேஷ்னல் ஆனது. அதுவரை சமந்தாவை அவ்வளவு கவர்ச்சியாக பார்க்காதவர்கள் அந்தப் பாடலில் சமந்தாவை அப்படி பார்த்ததும் கிறுகிறுத்து போயினர். மேலும் ரசிகர்களும் அவருக்கென்று பன்மடங்கு உயர்ந்தனர்.

சமந்தாவுக்கு வந்த தோல் வியாதி

சமந்தாவுக்கு வந்த தோல் வியாதி

இப்படி அவரது கேரியரின் கிராஃப் உச்சத்தை நோக்கி சென்றுகொண்டிருந்த சூழலில் அவருக்கு மையோசிடிஸ் எனும் அரிய வகை தோல் நோய் வந்தது. இதுகுறித்து அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ரசிகர்கள் அனைவரும் அதனை கேட்டு அதிர்ச்சி அடைய; தன்னம்பிக்கை இழக்காத சமந்தா தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு தற்போது அந்த நோயிலிருந்து மீண்டிருக்கிறார்.

புஷ்பா 2வுக்கு நோ சொன்ன சமந்தா?

புஷ்பா 2வுக்கு நோ சொன்ன சமந்தா?

இந்நிலையில் முழுவதுமாக நோயிலிருந்து மீண்ட சமந்தா ஒர்க் அவுட், கோயில் வழிபாடு என பிஸியாக இருக்கிறார். அதுமட்டுமின்றி அவர் நடிப்பில் உருவாகியிருக்கும் சாகுந்தலம் படமும் விரைவில் வெளியாகவிருக்கிறது. சூழல் இப்படி இருக்க; புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்திலும் சமந்தாவை ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆட படக்குழு தயாரிப்பில் அணுகியபோது திட்டவட்டமாக அதற்கு சமந்தா மறுத்துவிட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

சமந்தா மறுத்ததற்கு காரணம் என்ன?

சமந்தா மறுத்ததற்கு காரணம் என்ன?

சினிமாவுக்குள் ரீ என்ட்ரி கொடுத்திருக்கும் சமந்தா கடந்த காலங்களில் தனக்கு நடந்த கசப்பான நிகழ்வுகளை மறப்பதற்கு ஒரே வழி மீண்டும் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதுதான். எனவே திரும்பவும் கவர்ச்சி நடனம் என்ற பாதைக்குள் சென்றுவிட்டால் மீண்டும் வெளியே வர முடியாது என முடிவெடுத்ததால்தான் புஷ்பா 2வுக்கு அவர் நோ சொல்லிவிட்டார் என கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X