Samantha: ‘அங்க அதிகமா முடி வளர இதுதான் காரணம்'... தயாரிப்பாளரை அசால்ட்டாக டீல் செய்த சமந்தா!
சென்னை: சமந்தா நடித்துள்ள சாகுந்தலம் திரைப்படம் கடந்த 14ம் தேதி வெளியானது.
80 கோடி ரூபாய் பட்ஜெட்டில் 3டி தொழில்நுட்பத்தில் ரிலீஸான இந்தப் படம் ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.
இதனால் சாகுந்தலம் படம் 20 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், சாகுந்தலம் படத்தின் தோல்வியை குறிப்பிட்டு விமர்சித்த தயாரிப்பாளருக்கு, சமந்தா பதிலடி கொடுத்துள்ளார்.

தயாரிப்பாளருக்கு சமந்தா பதிலடி:சமந்தா நடிப்பில் குணசேகரன் இயக்கியுள்ள சாகுந்தலம் திரைப்படம் பிரம்மாண்டமாக உருவானது. பான் இந்தியா படமாக 3டி டெக்னாலஜியில் உருவான சாகுந்தலம், கடந்த 14ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளில் வெளியான சாகுந்தலம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.
இதனால் 80 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான சாகுந்தலம் திரைப்படம், 20 கோடி ரூபாய் வரை நஷ்டம் அடைந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், சாகுந்தலம் படத்தின் தோல்வி குறித்து தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சிட்டி பாபு சர்ச்சையான முறையில் கருத்து தெரிவித்திருந்தார். பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்திருந்த அவர், சாகுந்தலம் படத்தோடு சமந்தாவின் திரை வாழ்க்கை முடிந்துவிட்டது, அவர் நாயகிக்கான இடத்தை இழந்துவிட்டார் என குறிப்பிட்டிருந்தார்.
மேலும், சாகுந்தலை கேரக்டருக்கு பொருத்தம் இல்லாத சமந்தாவை எப்படி தேர்வு செய்தார்கள். படத்தை ஓடவைக்க சமந்தா தன் உடல்நிலையை காரணம் காட்டி மலிவான விளம்பரங்கள் செய்தார் என கடுமையாக விமர்சித்திருந்தார். அதுமட்டும் இல்லாமல், நாக சைதன்யாவை சமந்தா ஏன் பிரிந்தார் என்பது குறித்தும் சர்ச்சையாக பேசியிருந்தார். தயாரிப்பாளர் சிட்டி பாபுவின் இந்த பேட்டி, சமூக வலைத்தளங்களில் கடும் வைரலானது.
அதேநேரம் சமந்தா சிட்டாடல் வெப் சீரிஸின் ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளில் பிஸியாக இருந்தார். இந்நிலையில், தற்போது தயாரிப்பாளர் சிட்டி பாபுவுக்கு நடிகை சமந்தா அதிரடியாக பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக தனது இன்ஸ்டா ஸ்டோரியில் ஸ்டேட்டஸ் வைத்திருந்த அவர், "காது மடல்களில் எதற்காக ஒருவருக்கு அதிக முடி வளர்கிறது என கூகுளில் தேடினேன். அதற்கு அதிகமான ஹார்மோன் சுரப்பது தான் காரணம் என தெரியவந்தது. இது யார் என்பது உங்களுக்கு தெரியும்" என சிட்டி பாபுவை மறைமுகமாக விமர்சித்துள்ளார் சமந்தா.

தயாரிப்பாளர் சிட்டி பாபுவை அசால்டாக டீல் செய்துள்ள சமந்தாவின் இந்த பதிலடி, ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. நாக சைதன்யாவுடன் விவாகரத்து, மயோசிடிஸ் என பல பிரச்சினைகளை அடுத்தடுத்து கடந்து வந்துள்ள சமந்தா, தற்போது தயாரிப்பாளர் சிட்டி பாபுவையும் பொளந்து கட்டிவிட்டார் என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
காளிதாசன் எழுதிய சகுந்தலையின் காதல் கதையை பின்னணியாக வைத்து சாகுந்தலம் திரைப்படம் உருவானது. சமந்தாவுடன் தேவ் மோகன், அதிதி பாலன், கௌதமி, பிரகாஷ்ராஜ், மதுபாலா, அல்லு அர்ஜூனின் மகள் அல்லு ஆர்கா ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். சாகுந்தலம் திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











