இவங்களும் வந்தாச்சுல.. காஜல், ரகுல் பிரீத், பிரணிதாவைத் தொடர்ந்து அதே ஸ்பாட்டுக்கு வந்த சமந்தா!

By

சென்னை: பிரபல நடிகைகளை அடுத்து, சமந்தாவும் அதே ஹாலிடே ஸ்பாட்டுக்கு சென்றுள்ளார்.

நவம்பர், டிசம்பரில் ஹாலிடேவுக்கு வெளிநாடு செல்வதை சில நடிகைகள் வழக்கமாக வைத்துள்ளனர்.

இந்த கொரோனா காலகட்டத்தில் நடிகைகள் வெகேஷனுக்கு செல்வது அதிகரித்துள்ளது.

பதிவிட்டு வந்தனர்

பதிவிட்டு வந்தனர்

நடிகை காஜல் அகர்வால் ஹனிமூனுக்காக மாலத்தீவு சென்றிருந்தார். முன்னதாக, மௌனி ராய், மந்திரா பேடி, டாப்ஸி ஆகியோர் அங்கு சென்றிருந்தனர். பிறகு நடிகைகள் வேதிகா, பிரணிதா என பலர் அங்கு சென்றனர். அங்கிருந்து பிகினி உள்ளிட்ட புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வந்தனர்.

சமந்தாவும் ஆஜர்

சமந்தாவும் ஆஜர்

இந்த நிலையில், சமீபத்தில் அங்கு குடும்பத்துடன் சென்றிந்தார், ரகுல் பிரீத் சிங். அவரும் அங்கிருந்து புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். அவருடைய பிகினி புகைப்படங்கள் வைரலானது. இதற்கிடையே இப்போது நடிகை சமந்தாவும் அங்கு ஆஜராகி இருக்கிறார்.

ஸ்கூபா டைவிங்

ஸ்கூபா டைவிங்

இதையடுத்து, இப்படி எல்லா ஹீரோயின்களும் அதே இடத்துக்கு போறாங்களே ஏன்? என்று கேட்டுள்ளனர். அங்கிருந்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் சமந்தா. ஒரு போட்டோவில் கடலை ஸ்டைலாக பார்க்கும் அவர், மற்றொரு போட்டோவில் ஸ்கூபா டைவிங்கிற்கு தயாராகிறார்.

வந்து விழுந்த கமென்ட்ஸ்

வந்து விழுந்த கமென்ட்ஸ்

இதற்கு ஏராளமான லைக்ஸ் மற்றும் கமென்ட்ஸ் வந்து விழுந்திருக்கிறது. நாக சைதன்யாவின் சகோதரரான அகில், நம்பவே முடியலை என்று கமென்ட் அடித்திருக்கிறார். 'அசத்தலாக முடித்துவிட்டேன்' என்று கூறியிருக்கிறார் சமந்தா. ஒரு கலாய் ரசிகர், தண்ணிக்குள்ள போய் காஜல் அகர்வாலை மீட் பண்ணிட்டு வாங்க என்று கூறியுள்ளார்.

ஷார்க்கை பார்த்தா

ஷார்க்கை பார்த்தா

இந்த ஸ்கூபா டைவிங் காஸ்ட்யூம்ல செமயா இருக்கீங்க என்று சிலர் கூறியுள்ளனர். இன்னும் சிலர், பார்த்து போயிட்டு, பத்திரமா திரும்புங்க என்று பாசமாகத் தெரிவித்துள்ளனர். சில நக்கல் நெட்டிசன்ஸ், போற வழியில ஷார்க்கை பார்த்தீங்கன்னா நான் கேட்டேன்னு சொல்லுங்க என கூறியுள்ளனர்.

பிடிச்ச ஸ்பாட்

பிடிச்ச ஸ்பாட்

மேக்கப் இல்லாமலே நீங்க அழகுதான் என்று சிலர், பலர் அவர் அழகை வர்ணித்தும் கருத்து தெரிவித்துள்ளனர். அக்கா, அது எனக்கு பிடிச்ச ஸ்பாட் என்று ஒருவரும் கடைசியில நீங்களும் அங்க போயிட்டீங்களே என்று சிலரும் தெரிவித்துள்ளனர். இந்த போட்டோஸ் வைரலாகி வருகிறது.

Recommended Video

Nayanthara Family Surprise Birthday Party | Vignesh Shivan, Celebrity Wishes | Filmibeat Tamil
வசித்து வருகிறார்

வசித்து வருகிறார்

சமந்தா அடுத்து, விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நயன்தாராவுடன் நடிக்க இருக்கிறார். அஸ்வின் சரவணன் இயக்கும் படத்திலும் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. தெலுங்கு ஹீரோ நாக சைதன்யாவை காதலித்து வந்த சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஐதராபாத்தில் வசித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X