Samantha: சமந்தா இன்ஸ்டாவில் நாக சைதன்யா போட்டோஸ்.. லவ்.. கல்யாணம்.. ரொமான்ஸ்.. விவாகரத்து

சென்னை: திரையுலகில் ஒருவருக்கு திருமணம் என்றாலே ரசிகர்கள் அவர்களின் திருமண ஏற்பாடுகள், திருமணங்கள் குறித்தும் தெரிந்து கொள்ள மக்கள் மத்தியில் எப்போதும் எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. அதிலும், கல்யாண பேச்சு தொடங்கி, பத்திரிகை, சீர் வரிசை, கல்யாணம் நடக்கும் மண்டபம், மணமகன் - மணமகள் உடை, மேக்கப், கலந்து கொள்ளும் பிரபலங்கள், திருமணம் முடிந்த பின்னர் அவர்கள் ஹனிமூனுக்குச் செல்லும் வரை ரசிகர்கள் தெரிந்து கொள்ள எப்போதும் ஆவலாகவே இருந்துள்ளனர்.

இப்படியான நிலையில், நடிகர் நாக சைதன்யா - சோபிதா துலிபாலா திருமணம் குறித்து தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலாகவே உள்ளனர். அதேநேரத்தில் நாக சைதன்யாவின் முன்னாள் மனைவியான நடிகை சமந்தா குறித்தும், அவரது நடவடிக்கைகள் குறித்தும் இந்த நேரத்தில் தெரிந்துகொள்ள ரசிகர்கள் மத்தியில் ஆவல் அதிகமாகவே உள்ளது. அப்படிப் பார்க்கும்போது, சமந்தாவின் இன்ஸ்டாகிராமில், இருக்கும் நாக சைதன்யாவின் புகைப்படங்களும், அவற்றை அவர் எப்போது பதிவிட்டார் என்பது குறித்தும் இந்தத் தொகுப்பில் நாம் காணலாம்.

samantha naga chaitanya sobhita dhulipala

சமந்தாவும் நாக சைதன்யாவும் கடந்த 2017ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னர் 2021ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் பிரிந்தனர். இதற்கிடையில் நாக சைதன்யா குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தா பல்வேறு பதிவுகளைப் பகிர்ந்துள்ளார். குறிப்பாக இன்ஸ்டாகிராமில் போஸ்ட்டாக அவர் பதிவிட்டது, இப்போதும் அவரது அக்கவுண்டில் உள்ளது. இதில் காதலித்த காலம் முதல் விவாகரத்துக்கு முன்னர் வரையிலான போஸ்ட்கள் உள்ளன.

samantha naga chaitanya sobhita dhulipala

இன்ஸ்டா: 2016ஆம் ஆண்டு டிசம்பரில், கிருஸ்மஸ் மரத்தில் நாக சைதன்யா ஸ்டார்களை வைப்பதைப் பகிர்ந்துள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி, நாக சைதன்யா மற்றும் நண்பர்களுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அப்போது இருவரும் காதலித்துக் கொண்டு இருந்தனர். இவர்கள் 2017ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னர், அக்டோபர் 20ஆம் தேதி, இருவரும் ஹனிமூன் சென்றனர். அப்போது விமானத்தில் இருவரது கைகளும் தெரியும்படியான புகைப்படத்தைப் பகிர்ந்த சமந்தா, 'என்னை எங்காவது கூட்டிச் செல்’ என கேப்ஷன் இட்டிருந்தார்.

samantha naga chaitanya sobhita dhulipala

ரொமாண்டிக்: அதே ஆண்டில் நவம்பர் 23ஆம் தேதி, நாக சைதன்யாவின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து போஸ்ட் போட்டிருந்தார். இந்த போஸ்ட்டுக்காக, அவர் தனது திருமணத்தின்போது, நாக சைதன்யாவுக்கு முத்தம் கொடுக்கும்போது எடுத்த புகைப்படத்தைப் பதிவிட்டது இப்போதும் அவரது அக்கவுண்டில் உள்ளது.

samantha naga chaitanya sobhita dhulipala

அதேபோல் இருவரும் திருமணத்திற்குப் பின்னர் இணைந்து நடித்த படமான மஜிலி படத்தின் போஸ்டரை 2019ஆம் ஆண்டு டிசம்பர் 29ஆம் தேதி, பதிவிட்டுள்ளார். அதே டிசம்பர் முதல் வாரத்தில் நாக சைதன்யா மற்றும் நண்பர்களுடன் எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார், அது இப்போதுவரை உள்ளது. அதேபோல் பிரபல சோப்பு விளம்பரத்தில் நடித்த போஸ்ட்டும் உள்ளது.

samantha naga chaitanya sobhita dhulipala

ஆச்சரியம்: அதன் பின்னர் 2020 டிசம்பர் 31ஆம் தேதி தனது நண்பர்களுடன் எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். மேலும் இந்தப் புகைப்படத்தில் உள்ளவர்களுடன் அவர் கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி பகிர்ந்த புகைப்படத்தையும் இணைத்துள்ளார். இதில் நாக சைதன்யாவுக்கு மட்டும் வயசே ஆகமாட்டிங்குது என கேப்ஷன் இட்டுள்ளார். 2021ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்தை அறிவித்திருந்தாலும், 2022ஆம் ஆண்டு நீதிமன்றம் இவர்களின் திருமணப் பதிவினை ரத்து செய்தது. அதன் பின்னரும் சமந்தா தனது இன்ஸ்டா பக்கத்தில் நாக சைதன்யாவின் புகைப்படங்களை டெலிட் செய்யாமல் இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை அளிக்கின்றது.

samantha naga chaitanya sobhita dhulipala

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X