சமந்தா புதிய படங்களில் ஒப்பந்தமாகாமல் இருக்க காரணம் கர்ப்பமில்லையாம்.. இதுதானாம்!
சென்னை: நடிகை சமந்தா புதிய படங்களில் ஒப்பந்தமாகாமல் இருப்பதற்கான காரணம் கர்ப்பம் இல்லை என தெரியவந்துள்ளது.
தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா மகன் நடிகர் நாக சைத்தன்யாவும் நடிகை சமந்தாவும், காதலித்து வந்தனர். இதனைத்தொடர்ந்து இருவீட்டாரின் சம்மதத்துடன் இருவரும் கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கோவாவில் திருமணம் செய்து கொண்டனர்.
நடிகை சமந்தா கிருஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர், நாக சைதன்யா இந்து மதத்தைச் சேர்ந்தவர். எனவே, இரண்டு மத முறைப்படியும் திருமணம் நடைப்பெற்றது.

பெரும் வரவேற்பு
இதைத்தொடர்ந்து நடிகை சமந்தா, தமிழ் மற்றும் தெலுங்கில் பிஸியாக நடித்து வருகிறார். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான ஓ பேபி படம் சக்கை போடு போட்டது. வசூலையும் அள்ளிக் குவித்தது அந்தப் படம்.

96 ரீமேக்
இந்த படத்திற்காக சமந்தாவுக்கு முதல் முறையாக கட்அவுட்களெல்லாம் வைத்து அசத்தினர் ரசிகர்கள். இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘96' தெலுங்கு ரீமேக்கில் மட்டுமே நடித்து வந்தார் சமந்தா.

சமந்தா கர்ப்பம்?
மற்ற எந்தவொரு புதிய படத்திலுமே சமந்தா கமிட்டாகவில்லை. இதனால் அவர் கர்ப்பமாக இருக்கிறாரோ என்ற சந்தேகம் எழுந்தது. இதுதொடர்பான செய்திகளும் தொடர்ந்து வெளியாயின.

வெப் சீரிஸில் சமந்தா
இந்நிலையில் சமந்தா புதிய படங்களில் ஒப்பந்தமாகாததற்கான காரணங்கள் வெளியாகியுள்ளது. அதாவது நடிகை சமந்தா, வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து வருவது தெரியவந்துள்ளது. இந்த வெப் சீரிஸ் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் உருவாகிறது.

இதுதான் காரணம்
இந்த வெப் சீரிஸின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 1-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. வெப் சீரிஸில் நடிக்கும் காரணத்தினாலேயே நடிகை சமந்தா புதிய படத்தில் ஒப்பந்தமாகவில்லை என்றும் வெப்சீரிஸ் பணி முடிந்ததும் அவர் புதிய படங்களில் கவனம் செலுத்துவார் என்றும் தெரியவந்துள்ளது.


Click it and Unblock the Notifications











