Samantha: சாகுந்தலம் தோல்வியால் கடுப்பான சமந்தா... கோபத்தில் இப்படி ஒரு முடிவா?

சென்னை: சமந்தா நடித்துள்ள சாகுந்தலம் திரைப்படம் கடந்த வாரம் 14ம் தேதி வெளியானது.

தெலுங்கில் உருவான சாகுந்தலம் பான் இந்தியா படமாக தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் ரிலீஸானது.

80 கோடி ரூபாய் பட்ஜெட்டில் 3டி தொழில்நுட்பத்தில் உருவான இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு காணப்பட்டது.

ஆனால், சாகுந்தலம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால், சமந்தா கடும் விரக்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

 Samantha is in severe depression after the Disaster resulting from Shaakuntalam

சாகுந்தலம் தோல்வியால் கடுப்பான சமந்தா: சமாந்தா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள சாகுந்தலம் திரைப்படம் கடந்த வாரம் 14ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. 3டி தொழில்நுட்பத்தில் ஃபேன்டசியாக உருவான இந்தப் படத்தை குணசேகரன் இயக்கியுள்ளார். பான் இந்தியா படமாக 5 மொழிகளில் ரிலீஸான சாகுந்தலம், முதல் வாரமே சரியான ஓபனிங் கிடைக்காமல் தோல்வியை தழுவியதாக சொல்லப்படுகிறது.

80 கோடி பட்ஜெட்டில் உருவான சாகுந்தலம் முதல் வாரம் முடிவில் 10 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளதாம். இதனால் முதலுக்கே மோசமான நிலையில் உள்ளது சாகுந்தலம். சமந்தா நடிப்பில் கடைசியாக வெளியான யசோதா திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதுமட்டும் இல்லாமல் பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூலித்திருந்தது.

 Samantha is in severe depression after the Disaster resulting from Shaakuntalam

அதேபோல், குணசேகரன் இயக்கத்தில் கடைசியாக ரிலீஸான ருத்ரமாதேவி திரைப்படமும் பாக்ஸ் ஆபிஸில் தரமான சம்பவம் செய்திருந்தது. இதனால் சாகுந்தலம் படத்தை ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்திருந்தனர். முக்கியமாக சமந்தாவும் இந்தப் படத்தின் ரிசல்ட்டை அதிகம் நம்பியிருந்தார். சொந்த வாழ்க்கையில் பிரச்சினை, மயோசிடிஸ் பாதிப்பு என எல்லாவற்றையும் கடந்து சாகுந்தலம் படத்தில் நடித்திருந்தார் சமந்தா.

அதுமட்டும் இல்லாமல் சாகுந்தலம் படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து பங்கேற்று வந்தார் சமந்தா. இதனால் சாகுந்தலம் எப்படியும் வெற்றிப் பெறும் என்ற நம்பிக்கையில் இருந்த சமந்தாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. சாகுந்தலம் படத்தின் முதல் வாரம் ரிசல்ட்டை பார்த்த சமந்தா கடும் மன விரக்தியில் உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும், தனது செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு தனிமையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 Samantha is in severe depression after the Disaster resulting from Shaakuntalam

இந்தப் படம் இரண்டு முறை ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டு தற்போது வெளியாகியுள்ளது. காளிதாசன் எழுதிய சகுந்தலையின் காதல் கதையை பின்னணியாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது. சமந்தா ஜோடியாக மன்னன் துஷ்யந்தன் கேரக்டரில் தேவ் மோகனும், மற்ற பாத்திரங்களில் அதிதி பாலன், கௌதமி, பிரகாஷ்ராஜ், மதுபாலா ஆகியோரும் நடித்துள்ளனர். அதேபோல் அல்லு அர்ஜூனின் மகள் அல்லு ஆர்கா சமந்தா மகளாக நடித்து சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.

சாகுந்தலம் படத்தில் முதலில் அனுஷ்கா தான் நடிக்கவிருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்தப் படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் தயக்கம் காட்டி வந்தனர். இதனால் சில ஏரியாக்களில் சாகுந்தலம் படத்தின் தியேட்டர் ரைட்ஸ் உரிமை குறைந்த விலைக்கு கொடுக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. சாகுந்தலம் தோல்வியால் செல்போனை சுவிட் ஆஃப் செய்துவிட்டு விரக்தியில் உள்ள சமந்தாவை, யாரும் தொடர்புகொள்ள முடியவில்லை எனவும் சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X