என்னங்க சமந்தாவோட அழகும் உற்சாகமும் அதிகமாயிட்டே போகுதே.. என்ன ரகசியம்?
ஐதராபாத் : நடிகை சமந்தாவின் நடிப்பில் தற்போது யசோதா மற்றும் குஷி படங்கள் உருவாகி வருகின்றன.
Recommended Video
சமீபத்தில் தமிழில் அவரது நடிப்பில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் படமும் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்துள்ளது.
படங்களில் மட்டுமின்றி தனியார் நிகழ்ச்சிகளிலும் விளம்பரங்களிலும் அதிகமாக காணப்படுகிறார் சமந்தா.

கூடிய சமந்தா அழகு
நாக சைத்தன்யாவுடனான நடிகை சமந்தாவின் விவாகரத்து முடிவு அவரது கேரியரை எந்தவகையிலும் பாதிக்கவில்லை. அவர் அதை பாதிக்க விடவில்லை. பானா காத்தாடி படத்தில் பார்த்த சமந்தாவை காட்டிலும் தற்போது அவரது அழகு மேலும் கூடியுள்ளது. இதனால் ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர்.

இந்திய அளவில் பிரபலம்
தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் மட்டுமின்றி இந்திய அளவிலும் சமந்தா மிகவும் பிரபலமாகியுள்ளார். சமீபத்தில் வெளியான தி பேமிலி மேன் 2 வெப் தொடர் இவரை பாலிவுட்டிலும் பிரபலமாக்கியுள்ளது. முன்னதாகவே ஷாருக்கிற்கு ஜோடியாக முதலில் சமந்தாவைத்தான் அட்லி அணுகியதாக தகவல்கள் வெளியாகின.

ஷாருக் படத்தை மிஸ் செய்த சமந்தா
ஆனால் அவர் சில தவிர்க்க முடியாத காரணங்களால் அதை ஏற்கவில்லை என்றும் கூறப்பட்டது. இதனிடையே தமிழில் இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் படமும் இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்துள்ளது. இதில் கதீஜா என்ற கேரக்டரில் சமந்தா நடித்திருந்தார்.

தளபதி 67ல் சமந்தா?
முன்னதாக விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் தமிழில் நடித்துள்ள சமந்தா, நான்காவது முறையாக விஜய்யுடன் தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். படத்தில் ஹீரோயினுக்கு வெளிட்டான ரோல் இருக்கும் என்று முன்னதாக அவர் தனது பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

சத்குரு நிகழ்ச்சியில் சமந்தா
இந்நிலையில் படங்களில் மட்டுமின்றி தனியார் நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பரங்களிலும் சமந்தாவை அதிகமாக காண முடிகிறது. ஐதராபாத்தில் நடைபெற்ற சத்குருவின் சேவ் சாயில் நிகழ்ச்சில் சமந்தா கலந்து கொண்டு சத்குருவிடம் பல கேள்விகளை எழுப்பினார். அதற்கு அவர் கொடுத்த பதில்களுக்கு சமந்தாவின் ரியாக்ஷன் மிகவும் சிறப்பாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.
டூ டூ பாட்டிற்கு ஆட்டம்
மேலும் மேடையில் சத்குருவுடன் தோன்றிய சமந்தா, காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் டூ டூ பாடலுக்கும் ஆட்டம் போட்டார். இந்த நிகழ்ச்சியில் சமந்தா கலந்துக் கொண்டது சிறப்பாக பார்க்கப்படுகிறது. மேலும் சமந்தாவிடம் தற்போது அதிகமான உற்சாகம் மற்றும் மகிழ்ச்சி காணப்படுவதாக அவரை பார்ப்பவர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். நிகழ்ச்சியில் அழகான புடவையில் அம்சமாக காணப்பட்டார் சமந்தா.


Click it and Unblock the Notifications











