சமந்தா கர்ப்பமா?: அவரே சோக்கா பதில் சொல்றார் பாருங்க
Recommended Video
சென்னை: நடிகை சமந்தா கர்ப்பமா என்று கேட்டு வெளியான செய்தியை பார்த்த அவர் அளித்த பதில் தான் அல்டிமேட்.
சமந்தா தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் அவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

மேலும் படத்திற்கு படம் வித்தியாசம் காட்டிக் கொண்டிருக்கிறார். வித்தியாசமான கதை கொண்ட படங்களில் துணிந்து நடிக்கிறார். பிற நடிகைகள் தங்களின் இமேஜ் டேமேஜாகிவிடும் என்று பயந்து நடிக்க மறுக்கும் கதாபாத்திரங்களில் கூட தைரியமாக நடித்து ரசிகர்களிடம் கைதட்டல் வாங்கிக் கொண்டிருக்கிறார்.
சமந்தாவின் திரையுலக பயணம் இப்படி அமோகமாக சென்று கொண்டிருக்கிறது. படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் கணவருடன் சேர்ந்து வெளிநாடுகளுக்கு சென்று ரிலாக்ஸ் செய்கிறார். தனிப்பட்ட வாழ்க்கையும் சூப்பராக சென்று கொண்டிருக்கிறது.
திருமணம் ஆனாலே அடுத்து கர்ப்பமாகவில்லையா என்று தானே நம் மக்கள் பேசுவார்கள். சமந்தாவை மட்டும் விட்டு வைப்பார்களா என்ன. சமந்தா கர்ப்பமாக உள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது. இந்நிலையில் சமந்தா கர்ப்பமாக உள்ளாரா என்று கேட்டு தெலுங்கு இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டது. அந்த செய்தி சமந்தா கண்ணில் பட அவர் சூப்பராக ஒரு பதில் அளித்துள்ளார்.
சமந்தா கர்ப்பமா? என்ற செய்தியை ட்விட்டரில் பார்த்த அவர் கூறியிருப்பதாவது, அப்படியா...நீங்கள் கண்டுபிடித்தால் தயவு செய்து எங்களுக்கும் தெரியப்படுத்துங்கள் என்று பதில் அளித்துள்ளார்.
சமந்தாவின் பதிலை பார்த்த நெட்டிசன்கள் நெத்தியடின்னா அது இது தான் என்று தெரிவித்துள்ளனர். சமந்தா கணவருடன் வெளிநாடுகளுக்கு செல்லும்போது பிகினி அணிகிறார், மேலும் கவர்ச்சியாக உடை அணிந்து புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். அதை பார்க்கும் நெட்டிசன்கள் அவரை கண்டமேனிக்கு கலாய்க்கிறார்கள், விளாசுகிறார்கள்.
அதை எல்லாம் சமந்தா கண்டுகொள்வது இல்லை. என் கவர்ச்சி புகைப்படங்கள் தான் உங்களுக்கு பிரச்சனை என்றால் அப்படித் தான் புகைப்படம் எடுத்து வெளியிடுவேன் என்பது போன்று செய்கிறார். முகம் தெரியாத நெட்டிசன்களுக்காக பயந்து வாழ முடியாது என்பது சமந்தாவின் கருத்து.


Click it and Unblock the Notifications











