இரண்டாவது திருமணத்தை உறுதி செய்த சமந்தா.. ஆஹா புது மண தம்பதி ஜொலிக்கிறாங்க.. குவியும் வாழ்த்து

சென்னை: நடிகை சமந்தாவுக்கும், இயக்குநர் ராஜ் நிடிமோருவுக்கும் இன்று இரண்டாவது திருமணம் நடந்ததாக காலையிலிருந்து தகவல்கள் வட்டமடித்துக்கொண்டிருந்தன. ஆனால் அதுகுறித்து இருவரும் எதுவும் சொல்லாமல் இருந்தார்கள். இந்நிலையில் தனக்கு இரண்டாவது திருமணம் தொடர்பான புகைப்படங்களை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துவருகிறார்கள்.

நாக சைதன்யாவை காதலித்து கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட சமந்தா; திருமணத்துக்கு பிறகும் நடிப்பில் மும்முரமாக இருந்தார். சைதன்யாவும் அவருக்கு முழு ஆதரவை கொடுத்துவந்தார். ஒருகட்டத்தில் அவர்களுக்குள் ஏற்பட்ட சின்ன சின்ன மனஸ்தாபங்கள் பெரிய பிரச்னையாக வெடிக்க; சில வருடங்களுக்கு முன்பு சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார்கள். சமந்தாவை பிரிந்த சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.

இயக்குநர் ராஜுடன் காதல்: முதல் திருமண முறிவுக்கு பிறகு மையோசிடிஸ் நோயால் அவதிப்பட்ட சமந்தா தீவிர சிகிச்சை பெற்று அந்த நோயிலிருந்து மீண்டார். பூரண குணமடைந்து வந்த அவர் மீண்டும் சினிமாக்களில் நடிக்க ஆரம்பித்தார். அப்போது இயக்குநர் ராஜ் நிடிமோருவை சமந்தா காதலிப்பதாக தகவல்கள் பரவின. ஆனால் இரண்டு பேரும் எதுவும் பேசாமல் தங்கள் பணிகளில் கவனம் செலுத்தினார்கள்.

Samantha Married Raj Nidimoru Today Actress Shares Second Wedding Photos on Instagram
Photo Credit:

இன்று நடந்த இரண்டாவது திருமணம்: சூழல் இப்படி இருக்க அவர்கள் இரண்டு பேருக்கும் கோவை ஈஷா யோகா மையத்தில் வைத்து இன்று இரண்டாவது திருமணம் நடந்ததாக காலையிலிருந்து சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகின. ஆனால் சம்பந்தப்பட்ட இருவரும் அதனை உறுதி செய்யாமல் இருந்தார்கள். இந்நிலையில் தனக்கும் ராஜுக்கும் நடந்த திருமண புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் சமந்தா.

ஜொலிக்கும் ஜோடி: இந்தத் திருமணத்தில் மணமக்களுக்கு நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டுமே கலந்துகொண்டார்கள். திருமணத்துக்கு சமந்தா சிவப்பு நிற பட்டு புடவை அணிந்து தேவதை போல் ஜொலித்தார். ராஜ் நிடிமோருவும் சந்தன நிறத்தில் குர்தா அணிந்து கலக்கலாக இருந்தார். இந்தப் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சமந்தாவுக்கும் ராஜுக்கும் தங்களது வாழ்த்து மழையை பொழிந்துவருகிறார்கள்.

ராஜுக்கும் இது இரண்டாவது திருமணம்: முன்னதாக இயக்குநர் ராஜ் நிடிமோரு ஏற்கனவே ஷ்யாமிலி என்பவரை திருமணம் செய்திருந்தார். சில வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த அவர்கள் சில காரணங்களால் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சமந்தாவுக்கும், ராஜுக்கும் இரண்டாவது திருமணம் நடந்ததை அடுத்து ஷ்யாமிலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'விரக்தியானவர்கள் விரக்தியான செயலை செய்வார்கள்' என்று போஸ்ட் போட்டிருந்தது பலரது கவனத்தை ஈர்த்திருந்தது.

More from Filmibeat

Read more about: samantha சமந்தா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X