மாமனார், மாமியாரின் 25வது திருமண நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்காத சமந்தா
Recommended Video

ஹைதராபாத்:மாமனார், மாமியாரின் 25வது திருமண நாள் கொண்டாட்டத்தில் சமந்தா கலந்து கொள்ளவில்லை.
தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவுக்கும், நடிகை அமலாவுக்கும் திருமணமாகி 25 ஆண்டுகளாகிவிட்டது. அவர்களின் 25வது திருமண நாளை ஹைதராபாத்தில் சிறப்பாக கொண்டாடினார்கள்.
அந்த நிகழ்ச்சியில் உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டு அவர்களை வாழ்த்தினார்கள்.

சமந்தா
திருமண நாள் கொண்டாட்டத்தில் நாகர்ஜுனாவின் மகன்கள் நாகசைதன்யா, அகில் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆனால் மருமகள் சமந்தா அந்த கொண்டாட்டத்தில் பங்கேற்கவில்லை.
அகில்
தன் பெற்றோரின் திருமண நாள் அன்று எடுத்த புகைப்படங்களை நடிகர் அகில் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்தவர்கள் இது என்னப்பா மருமகள் சமந்தாவை காணவில்லை என்று வியந்தனர்.

முக்கியம்
சமந்தா படப்பிடிப்பில் பிசியாக உள்ளாராம். அதனால் அவரால் மாமனார், மாமியாரின் 25வது திருமண நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லையாம். தொழில் பக்தியால் அவர் தனது வீட்டு விழாவில் கூட கலந்து கொள்ளவில்லையாம்.

தேனிலவு
சமந்தா திருமணம் முடிந்த ஒரு வாரத்திற்குள் படப்பிடிப்பில் கலந்து கொள்ள சென்றார். தான் ஒப்புக் கொண்ட பட வேலைகளை முடித்த பிறகே தேனிலவுக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











