Samantha: பிரிந்த பிறகு ‘அதுமட்டும்’ தேவையா..? சமந்தா மீது எரிச்சலடைந்த நாக சைதன்யா!
சென்னை: வெங்கட் பிரபு இயக்கியுள்ள கஸ்டடி படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது.
சென்னையில் நடைபெற்ற கஸ்டடி ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நாயகன் நாக சைதன்யா கலந்துகொண்டார்.
மேலும் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற நாக சைதன்யாவிடம் சமந்தா குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு அவர் சமந்தா பற்றி மிக எரிச்சலுடன் பதிலளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமந்தா மீது எரிச்சலடைந்த நாக சைதன்யா:2010ம் ஆண்டு வெளியான யே மாயா சேசாவே திரைப்படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் சமந்தா. கெளதம் மேனன் இயக்கிய இந்தப் படம் தமிழில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு வெர்ஷனாக உருவானது. தமிழில் சிம்பு - த்ரிஷா நடித்த கேரக்டரில், தெலுங்கில் நாக சைதன்யாவும் சமந்தாவும் நடித்திருந்தனர்.
இந்தப் படத்தில் சமந்தா - நாக சைதன்யா கெமிஸ்ட்ரி செம்மையாக ஒர்க் அவுட் ஆனதால், அடுத்தடுத்து மேலும் சில படங்களில் ஜோடி சேர்ந்தனர். மனம், மகாநதி, மஜிலி, ஓ பேபி படங்களில் நடித்த இருவரும் சில வருடங்களாக காதலித்து வந்தனர். பின்னர் 2017ல் இருவீட்டார் சம்மதத்துடன் மிக பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.
அதன்பின்னர் சமந்தாவும் நாக சைதன்யாவும் கோலிவுட், டோலிவுட்டின் க்யூட் ஜோடியாக வலம் வந்தனர். ஆனால், யார் கண் பட்டதோ தெரியவில்லை, 2021ல் இருவரும் பிரிவதாக தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் அறிவித்தனர். சமந்தா கவர்ச்சியாக நடிக்கக் கூடாது என நாக சைதன்யாவும் அவரது குடும்பத்தினரும் ஆர்டர் போட்டதாகவும், அதுதான் பிரச்சினை ஆனது என்றும் சொல்லப்படுகிறது.
அதேநேரம் நாக சைதன்யாவை பிரிந்தது ஏன் என சமந்தா செல்லும் இடமெல்லாம் கேள்விகள் எழுந்தன. இதிலிருந்து மீண்டு வந்த சமந்தா தற்போது அடுத்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதனிடையே அவருக்கு மயோசிடிஸ் பிரச்சினையும் ஏற்பட்டது. இந்நிலையில், நாக சைதன்யாவை விவாகரத்து செய்துகொண்டாலும் இருவரும் நட்பாக இருக்கிறோம் என சமந்தா ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

இதனை குறிப்பிட்டு நாக சைதன்யாவிடம் கேள்விக் கேட்கப்பட்டது. வெங்கட் பிரபு இயக்கியுள்ள கஸ்டடி படத்தில் நாக சைதன்யா ஹீரோவாக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. இதில், நாக சைதன்யா, வெங்கட் பிரபு உட்பட கஸ்டடி படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
மேலும், கஸ்டடி படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளிலும் நாக சைதன்யா பங்கேற்றார். அப்போது தான் சமந்தாவின் கருத்து குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த நாக சைதன்யா, பிரிய வேண்டும் என முடிவு செய்துவிட்டால் அதற்கு பிறகு நட்பு எதற்கு? இது என்னை மிகவும் எரிச்சல் அடைய செய்கிறது. எனக்கு அப்படிப்பட்ட நட்பு தேவையில்லை என மிக காட்டமாகக் கூறியுள்ளார். நாக சைதன்யாவின் இந்த பதில் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











