இந்த மேட்டர் நல்லா இருக்கே.. சமந்தா – சைதன்யா டாட்டுவுக்குள்ள இப்படியொரு காதல் ரகசியம் இருக்கா?
ஹைதராபாத்: நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா கைகளில் குத்தப்பட்டிருக்கும் டாட்டூவுக்கு ஒரு சூப்பரான அர்த்தம் இருப்பதை நடிகர் நாக சைதன்யா ரிவீல் செய்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
Recommended Video
நாடு முழுவதும் 4ம் கட்ட ஊரடங்குக்கு மக்கள் தயாராகி வருகின்றனர். இந்த லாக்டவுனில் போர் அடித்துப் போன பல இளைஞர்கள் பழைய விசயங்களை சமூக வலைதளங்களில் கிண்டி கிளறி வைரலாக்கி வருகின்றனர்.
சில விசயங்கள் சர்ச்சையை கிளப்பினாலும், பல நல்ல சுவாரஸ்யமான நிகழ்வுகளும் அவ்வப்போது வெளிச்சத்துக்கு வந்து கொண்டே இருக்கிறது.

சமந்தா – சைதன்யா
விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு வெர்ஷனில் அறிமுகமான இந்த ஜோடி, தொடர்ந்து காதலித்து வந்த நிலையில், இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகும் நடிகை சமந்தா தொடர்ந்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

கர்ப்பமானதாக
இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே நடிகை சமந்தா சமூக வலைதளங்களில் அவ்வளவாக ஆக்டிவாக இல்லை. விக்னேஷ் சிவனின் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் இருந்து வெளியேறியதாக தகவல் வெளியானதை தொடர்ந்து சமந்தா கர்ப்பமாக இருக்கிறார் என்ற வதந்திகளும் வைரலாக பரவின.

டாட்டூ ரகசியம்
லாக்டவுன் போரிங்கை சமாளிக்க நெட்டிசன்கள் பலரும் த்ரோபேக் போட்டோக்களையும், வீடியோக்களையும் கிளறி வருகின்றனர். அதில், தற்போது, சமந்தா கையிலும், தனது கையிலும் போடப்பட்டிருக்கும் வைக்கிங் டாட்டூ ரகசியத்தை நாக சைதன்யா ஒரு பேட்டியில் கூறியிருப்பது டோலிவுட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

வைக்கிங் டாட்டூ
இரண்டு ஏரோ மார்க் போட்டது போல இருக்கும் வைக்கிங் டாட்டூவை நடிகர் நாக சைதன்யா மற்றும் சமந்தா தங்கள் கைகளில் போட்டுள்ளனர். இந்த டாட்டூவிற்கான அர்த்தம் என்ன என்றால் உங்களின் சுயத்தை கண்டறிந்து அதை மேலும் வளர்த்துக் கொள்ளுங்கள் என்றும், தனித்துவமாக இருங்கள் என்றும் பொருள் என நாக சைதன்யா அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

கல்யாண நாள்
மேலும், இந்த டாட்டூவை தனது திருமண நாள் அன்று நடிகர் நாக சைதன்யா போட்டுக் கொண்டதாகவும், இனி வரும் நாட்களில் இருவரும் இணைந்து இருந்தாலும், அவரவர் தனித்தன்மைகளை எதற்காகவும் விட்டுக் கொடுக்க வேண்டாம் என்ற அர்த்தத்தையே இந்த டாட்டூ குறிக்கிறது எனும் ரகசியத்தை சொல்லி உள்ளார் நாக சைதன்யா.

அந்த இடத்தில் டாட்டூ
டாட்டூ பிரியை ஆன நடிகை சமந்தாவும் வைக்கிங் டாட்டூவை போட்டுள்ளார். மேலும், கணவர் நாக சைதன்யாவின் பெயரை தனது மார்புக்கு கீழே பச்சைக் குத்தியுள்ளார். சில மாதங்களுக்கு முன்னதாக அந்த டாட்டூவையும் ரிவீல் செய்து சமந்தா வெளியிட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











