“சமந்தா-நாக சைத்தன்யா“வுக்கு… இவ்வளவு செலவு பண்ணியா திருமணம் நடந்துச்சு…ஷாக்கான ரசிகர்கள்!
சென்னை : வீட்டைக் கட்டிப்பார்...கல்யாணத்தை பண்ணிப்பாருனு சும்மாவா சொன்னாங்க. கால நேரம் பார்த்து... நாளு கிழமை பார்த்து ஒரு கல்யாணத்தை பண்றத்துக்குள்ள, அப்பப்பா மூச்சே நின்று விடும் போல் இருக்கும்.
Recommended Video
அதுவும் பிரபலங்களின் கல்யாணம் என்றால் சொல்லவே வேண்டாம். பூ அலங்காரம், மின் விளக்கு அலங்காரம் என பிரம்மாண்டத்திற்கு பஞ்சமே இருக்காது.
அப்படி கோலாகலமாக நடந்த சமந்தா,நாக சைத்தன்யாவின் திருமணத்திற்கு ஆன செலவு குறித்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி அனைவரின் தலையை கிறுகிறுக்க வைத்துள்ளது.

சமந்தா
தமிழை தாய் மொழியாக கொண்ட சமந்தா பல்லாவரத்தில் பிறந்து வளர்ந்தவர். தமிழை அழகாக பேசி தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரல் நடித்தார் சமந்தா. இத்திரைப்படம் தெலுங்கில் 'யே மாயா சேஸவே'என்ற பெயரில் வெளியானது. இதில் த்ரிஷாவின் கேரக்டரில் சமந்தா நடித்திருந்தார்.

முன்னணி நடிகர்களுடன்
விஜய், சூர்யா, விஷால், சிவகார்த்திகேயன், விக்ரம், ஜீவா, அதர்வா என தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். மேலும் விஜய்யுடன் கத்தி, தெறி, மெர்சல் போன்ற திரைப்படங்களில் நடித்தார். இந்த 3 திரைப்படங்களும் செம ஹிட்டாகின.

விவகாரத்து விவகாரம்
சமந்தா முதல் படத்தில் தன்னுடன் நடித்த நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா விவாகரத்து விவகாரம் குறித்த தகவல் இணையத்தில் தொடர்ந்து தீயாக பரவி வருகிறது.

கோலாகல திருமணம்
இந்நிலையில் சமந்தா, நாக சைத்தன்யாவின் திருமண செலவு குறித்த தகவல் தற்போது பரவி வருகிறது. கோவாவில் மிகவும் கோலாகலமாக நடந்த திருமணத்தில் 150 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். மேலும், 2017 அக்டோபர் 6ந் தேதி இந்து முறைப்படியும், 7ந் தேதி கிறிஸ்துவ முறைப்படியும் திருமணம் நடந்தது. மிகவும் பிரம்மாண்டமாக நடந்த அவர்களது திருமண செலவு மட்டும் ரூ. 10 கோடியை தாண்டிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜய்சேதுபதியுடன்
நடிகை சமந்தா விஜய்சேதுபதி, நயன்தாராவுடன் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்திலும், சாகுந்தலம் என்ற நூலைக்கொண்டு உருவான சாகுந்தலம் திரைப்படத்தில் சகுந்தலா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது.


Click it and Unblock the Notifications











