»   »  இந்து, கிறிஸ்தவ முறைப்படி சமந்தா - நாகசைதன்யா திருமணம்... இரண்டு நாட்கள் நடக்கிறது!

இந்து, கிறிஸ்தவ முறைப்படி சமந்தா - நாகசைதன்யா திருமணம்... இரண்டு நாட்கள் நடக்கிறது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோவா: நடிகை சமந்தாவுக்கும் நாகசைதன்யாவுக்கும் நாளை கோவாவில் பிரமாண்டமாக நடக்கிறது. ரு 10 கோடி செலவில் நடக்கவிருக்கும் இந்த திருமணத்துக்கு கோலாகலமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நீண்ட நாள் காதலர்களான நடிகை சமந்தா, நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யாவுக்கு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

Samantha - Nagasaithanya marriage tomorrow

இந்து, கிறிஸ்தவ முறைப்படி இந்த திருமணத்தை கோவாவில் நடத்துவது என்றும், அதில் இரண்டு குடும்பத்தினர் மட்டும் பங்கேற்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

கோவாவில் உள்ள டபிள்யூ தங்கம் விடுதியில் சமந்தா - நாகசைதன்யா திருமணம் நடைபெறுகிறது. நாளை (6-ந்தேதி) இந்து முறைப்படி சமந்தா - நாக சைதன்யா திருமணம் நடக்கிறது. நாளை மறுநாள் (7-ந்தேதி) கிறிஸ்தவ முறைப்படி இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

திருமணத்தையொட்டி, சமந்தா, நாகசைதன்யா இருவரும் 3 நாட்களுக்கு முன்பே கோவா சென்று விட்டனர்.

நாளை நடைபெறும் இந்த திருமணத்தில் நாக சைதன்யாவின் தாயார், தந்தை நாகார்ஜூனாவின் உறவினர்கள் ராணா, வெங்கடேஷ், சுரேஷ்பாபு, நாக சைதன்யாவின் தாத்தா ராமா நாயுடுவின் மனைவி, நாகார்ஜூனாவின் மனைவி அமலா, இவர்களுடைய மகன் அகில் மற்றும் சமந்தா குடும்பத்தினர் உள்ளிட்ட உறவினர்கள் 183 பேர் மட்டுமே பங்கேற்கிறார்கள். இவர்களுக்கு மட்டுமே அழைப்பிதழ் தரப்பட்டுள்ளது.

English summary
Samantha - Nagasaithanya marriage will be held tomorrow in Goa

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil