கணவர் பட சக்சஸ் பார்ட்டிக்கும் செல்லாத சமந்தா.. விஸ்வரூபம் எடுக்கிறதா விவாகரத்து பிரச்சனை?
ஹைதராபாத்: நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான லவ் ஸ்டோரி திரைப்படத்தின் சக்சஸ் பார்ட்டி செவ்வாய் கிழமை ஹைதராபாத்தில் நடைபெற்றது.
அமீர்கான் உடனான டின்னர் பார்ட்டியை புறக்கணித்தது போலவே நடிகை சமந்தா இந்த சக்சஸ் பார்ட்டியிலும் கலந்து கொள்ளவில்லை.
சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கும் நடிகை சமந்தா விவாகரத்து தொடர்பான கேள்விகளுக்கு நேரடியாகவும் பதில் சொல்ல மறுப்பது ஏகப்பட்ட கேள்விகளை ரசிகர்கள் மத்தியில் கிளப்பி வருகிறது.
MATTER FINISH... ♥️♥️♥️#SamanthaRuthPrabhu #SamanthAkkineni #chaysam #LoveStory #NagaChaitanyaAkkineni pic.twitter.com/kUCFUTQfGt
— Sita (Sita70686995) September 28, 2021
மழுப்பும் சமந்தா
சமீபத்தில் ரசிகர்களுடன் சாட்டிங் செய்ய நேரம் ஒதுக்கிய நடிகை சமந்தாவிடம் ரசிகர் ஒருவர் நேரடியாகவே உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் விவாகரத்து எனும் பேச்சுக்கள் அடிபடுகிறதே என்றும் ஹைதராபாத்தை விட்டு மும்பைக்கு போகப் போறீங்களா என்றும் கேட்க அதற்கு ஹைதராபாத் தான் என் சொந்த ஊர் இது போன்ற வதந்திகள் ஏன் பரவுகின்றன என தெரியவில்லை என இதற்கும் மட்டும் பதில் அளித்து விட்டு விவாகரத்து தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்காமல் மழுப்பி விட்டார்.

சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்
சமந்தா சோஷியல் மீடியாவில் பிசியாக சைக்கிளிங் செய்யும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார். மேலும், தான் தொடங்கிய நிறுவனத்தின் முதலாம் ஆண்டையும் கொண்டாடினார். ஆனால், கணவர் நாக சைதன்யாவின் லவ் ஸ்டோரி திரைப்படம் வெற்றி பெற்றதற்கு ஒரு வாழ்த்து போஸ்ட் கூட போடவில்லை.

அமீர்கான் டின்னரிலும் ஆப்சென்ட்
அமீர்கானின் லால் சிங் சத்தா படத்தில் நடித்து வரும் நாக சைதன்யாவின் லவ் ஸ்டோரி பட ரிலீசை முன்னிட்டு அவருக்கு சப்போர்ட் செய்ய லவ் ஸ்டோரி ப்ரீமியர் டின்னர் பார்ட்டியில் அமீர்கான் கலந்து கொண்டார். நாக சைதன்யா ஏற்பாடு செய்த அந்த டின்னர் பார்ட்டியில் நாகார்ஜுனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட நிலையில், நடிகை சமந்தா மட்டும் பங்கேற்கவில்லை.

20 கோடி வசூல்
இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் கடந்த வெள்ளிக் கிழமை வெளியான லவ் ஸ்டோரி திரைப்படம் கொரோனா லாக்டவுனுக்கு பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்ட நிலையில், பெரிய ஓப்பனிங்கை நாக சைதன்யாவின் லவ் ஸ்டோரி உருவாக்கியுள்ளது. முதல் வார வசூல் 20 கோடி ரூபாயை தாண்டிய நிலையில் சக்சஸ் பார்ட்டியை படக்குழு கடந்த செவ்வாயன்று நடத்தியது.

சமந்தா பங்கேற்கவில்லை
இயக்குநர் சேகர் கம்முலா, நாக சைதன்யா, சாய் பல்லவி மற்றும் நாகார்ஜுனா உள்ளிட்ட பலர் இந்த சக்சஸ் பார்ட்டியில் கலந்து கொண்டனர். ஆனால், கணவரின் புதிய பட வெற்றி விழாவில் மனைவி சமந்தா மட்டும் கலந்து கொள்ளவில்லை. தொடர்ந்து சமந்தா விலகி இருப்பது டோலிவுட்டில் விவாகரத்து செய்திகளை உண்மையாக்கும் வகையில் இருப்பதாக பேச்சுக்கள் மீண்டும் அடிபடத் தொடங்கி உள்ளன.

பிரச்சனை இருக்கு
சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவருமே இந்த விவகாரத்தில் இதுவரை எந்தவொரு நேரடி கருத்தையும் தெரிவிக்க மறுத்து வருகின்றனர். மறைமுகமாக மட்டுமே இவர்கள் தொடர்ந்து வதந்திகளை நம்ப வேண்டாம் என கூறி வருவதை பார்த்தால் இவர்கள் உறவில் வேறு ஏதோ ஒரு பிரச்சனை இருக்கு என்றே ரசிகர்கள் சந்தேகங்களை கிளப்பி வருகின்றனர்.

அதுவும் போச்சு
தி ஃபேமிலி மேன் 2 வெப்சீரிஸில் நடித்த நடிகை சமந்தாவுக்கு ஏகப்பட்ட பாலிவுட் வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், சமந்தாவை இதுவரை எந்தவொரு தயாரிப்பு நிறுவனமோ ஹீரோவோ அணுகவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும், தமிழ் படங்களில் நடிக்க தற்போது சமந்தா ஆர்வம் காட்டி வருவதாகவும் சில முன்னணி ஹீரோக்களுடன் சான்ஸ் கேட்டு பேச்சுவார்த்தைகள் நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











