“சாகுந்தலம்“ இயக்குனரின் மிகப்பெரிய கனவு… நிச்சயம் நிறைவேற்றுவேன்… மனம் திறந்த சமந்தா !
சென்னை : தென்னிந்தியாவின் முன்னணி நடிகை சமந்தா வரலாற்று முக்கியத்துவம் கொண்ட சாகுந்தலம் என்ற படத்தில் நடிக்க உள்ளார்.
சகுந்தலா கதாபாத்திரத்தில் பூஜா ஹெக்டே, அனுஷ்கா ஆகியோர் முதலில் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் இறுதியில் சமந்தாவை நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்தது.
தற்போது இந்த திரைப்படம் குறித்து நடிகை சமந்தா மனம் திறந்து பேசியுள்ளார்.

சர்ச்சை
தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பேமலி மேன் 2 வெப் தொடரில் சமந்தா ராஜி என்ற கதாபாத்தில் நடித்துள்ளார். இந்த தொடர் குறித்து பலவித சர்ச்சைக எழுந்தாலும் சமந்தாவின் நடிப்பு மிகவும் பரட்டுக்குரிய ஒன்றாக இருந்தது என்று அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

மகிழ்ச்சி
இந்நிலையில், நடிகை சமந்தா தனது அடுத்த திரைப்படமான சாகுந்தலம் திரைப்படம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதில், என்னுடைய இத்தனை ஆண்டு சினிமா வாழ்க்கையில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க உள்ளேன். அதில், சாகுந்தலம் திரைப்படத்தில் நான் இளவரசியாக நடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

நிறைவேறியுள்ளது
10ஆண்டுகால என் திரையுலக பயணத்தில் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பது என் நீண்ட கால கனவு அது தற்போது நிறைவேறி உள்ளது. இந்த படத்தில் நிச்சயம் என்னால் 100 சதவீதத்தை கொடுக்க முடியும் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

புராண கதை
இவ்வளவு விவரங்களைக் கொண்ட ஒரு ஸ்கிரிப்டை நான் கேள்விப்பட்டதே இல்லை. படம் குறித்த அனைத்து தகவல்களையும் இயக்குனர் குணசேகர் விரல் நுனியில் வைத்துள்ளார். இந்த மிகப்பெரிய புராண கதையில் நான் ஒரு பகுதியாக இருப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இது இயக்குனரின மிகப்பெரிய கனவு, இதை நான் நிச்சயம் நனவாக்குவேன் என்று சமந்தா கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











