பாவம் சமந்தா.. செல்லப் பிராணிகளிடம் இப்படி சிக்கித் தவிக்கிறாரே.. என்ன ஒரு க்யூட் வீடியோ!

ஹைதராபாத்: தனது செல்லப் பிராணிகளிடம் சிக்கித் தவிக்கும் செம க்யூட் வீடியோவை ஷேர் செய்து வைரலாக்கி வருகிறார் நடிகை சமந்தா.

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, சமூக வலைதளங்களில் சில மாதங்கள் ஆக்டிவாக இல்லாமல் இருந்து வந்தார்.

ஆனால், தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா தொடர்ந்து போட்டோக்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு ரசிகர்களை குஷிபடுத்தி வருகிறார்.

சொதப்பல் ஆண்டு

சொதப்பல் ஆண்டு

கடந்த ஆண்டு தமிழில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படம் சமந்தாவுக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. தெலுங்கில் வெளியான மஜ்லி மற்றும் ஓ பேபி ஆகிய இரு படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தன. ஆனால், இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான ‘96' படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘ஜானு' எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் சொதப்பியது.

கேக் செய்த கணவர்

கேக் செய்த கணவர்

நடிகை சமந்தாவின் பிறந்தநாள் கடந்த ஏப்ரல் 28ம் தேதி கொண்டாடப்பட்டது. கர்ப்பமாகி விட்டார் சமந்தா, அதனால் தான் சமூக வலைதளங்களில் முகம் காட்டவில்லை என பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தனது கணவர் நாக சைதன்யா காதலுடன் செய்த கேக்குடன் புகைப்படத்தை வெளியிட்டு வைரலாக்கி இருந்தார்.

ராணாவின் ரோகா

ராணாவின் ரோகா

அதனை தொடர்ந்து நடைபெற்ற நடிகர் ராணா - மிஹீகாவின் ரோகா நிகழ்ச்சியிலும் கணவர் நாக சைதன்யாவுடன் மஞ்சள் நிற சுடிதார் அணிந்து செம க்யூட்டாக கலந்து கொண்டார் நடிகை சமந்தா. ராணா - மிஹீகா ஜோடி புகைப்படங்களுக்கு இணையாக இந்த ஜோடியின் போட்டோக்களும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்புகளை பெற்றன.

பூஜா ஹெக்டேவுடன்

பூஜா ஹெக்டேவுடன்

மீண்டும் சமூக வலைதளம் வந்த நடிகை சமந்தாவுக்கும், நடிகை பூஜா ஹெக்டேவுக்கும் இடையே நடைபெற்ற சண்டை சமூக வலைதளத்தில் இரு நடிகைகளின் ரசிகர்கள் சண்டையாக விஸ்வரூபம் எடுத்தது. சமந்தாவை பற்றி தனது பக்கத்தில் பதிவிடப்பட்ட போஸ்ட்டுக்கு பூஜா ஹெக்டேவும், பூஜா ஹெக்டே பற்றி தோழிகளுடன் ரகசிய சாட் செய்ததாக வைரலான ஸ்க்ரீன் ஷாட்டுக்கும் இரு நடிகைகளும் விளக்கம் அளிக்காமலே அந்த சண்டை தானாகவே முடிவுக்கு வந்தது.

நீச்சல் குளத்தில்

நீச்சல் குளத்தில்

இரு தினங்களுக்கு முன்பு, நீச்சல் குளத்தில் டாப்ஸ் மற்றும் ஜீன்ஸ் பேன்ட் அணிந்தபடி, ஒரு கண்ணை கூந்தல் மறைக்கும் படி, ஒரு கண்ணால் ரசிகர்களை பார்க்கும் விதமாக சமந்தா கொடுத்த போஸும் இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியன் லைக்குகளை அள்ளி வைரலானது. ஜகதிஸ் ப்ளிஸ்ஸும் சமந்தாவின் அந்த போட்டோவிற்கு லைக் செய்திருந்தார்.

பாவம் சமந்தா

பாவம் சமந்தா

இந்நிலையில், தற்போது தனது வீட்டில் இருக்கும் இரு செல்ல நாய்க்குட்டிகளுடன் சமந்தா சிக்கித் தவிக்கும் பாவமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த இரு நாய்க்குட்டிகளும், நடிகை சமந்தா மீது ஏறிக் கொண்டு, அவரை உண்டு இல்லை என பண்ணிய வீடியோவை பார்த்த சமந்தா ரசிகர்களுக்கு கோபம் வந்தாலும், க்யூட் வீடியோவை ரசித்து வைரலாக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Read more about: samantha சமந்தா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X