“புஷ்பா“ அல்லு அர்ஜூனின் நடிப்பு பிரம்மிக்க வைக்கிறது… சமந்தா புகழாரம்!

சென்னை : புஷ்பா திரைப்படத்தில் அல்லு அர்ஜூனின் நடிப்பை பார்த்து நடிகை சமந்தா வியந்து பாராட்டி உள்ளார்.

அல்லு அர்ஜூன் திரைப்பயணத்தில் இப்படி ஒரு கதாபாத்திரத்தை அவர் தேர்ந்து எடுத்து நடித்தது இல்லை.

ஒரு வித்தியாசமான கதையை கையில் எடுத்துக்கொண்டு, செம்மரக் கடத்தல் காரராக அல்லு அர்ஜூன் நடித்துள்ளதை அனைவரும் புகழ்ந்து பாராட்டி வருகின்றனர்.

புஷ்பா

புஷ்பா

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'புஷ்பா. தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் டிசம்பர் 17ந் தேதி உலகமெங்கும் வெளியாகி வசூலை வாரிக்குவித்தது.

முக்கிய நடிகர்கள்

முக்கிய நடிகர்கள்

ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில், சுனில், அனசுயா பரத்வாஜ், அஜய் கோஷ், ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், கிஷோர், சுனில் ஆகியோரும் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் பெரும்பாலான காட்சிகள் மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளன. படத்திற்கான தமிழ் வசனங்களை மதன் கார்க்கி எழுதியுள்ளார்.

அட்டகாசமான பாட்டு

அட்டகாசமான பாட்டு

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படத்தின் அனைத்து பாடல்களும் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்தன. இந்த படத்தில் இடம்பெற்ற வாயா சாமி பாடலை விட சமந்தா ஆடிய ஊ சொல்றியா பாடல் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த ஒரு பாடலில் ஆட நடிகை 1.5 கோடி சம்பளம் வாங்கியதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகின.

பிரம்மிப்பு

பிரம்மிப்பு

இந்நிலையில், நடிகை சமந்தா தன்னுடை இன்ஸ்டாகிராம் பக்கத்தில், புஷ்பா படத்தை பார்த்து விட்டு அல்லு அர்ஜூனை வெகுவாக புகழ்ந்து தள்ளி உள்ளார். அதில், புஷ்பா படத்தில் ஒவ்வொரு நொடியும் கவர்ந்திழுக்கும் வகையில் உள்ளது. அல்லு அர்ஜூனின் வசன உச்சரிப்பும், ஒருபக்க தோள்பட்டையைத் தூக்கி வைத்துக் கொண்டு நடித்திருப்பதும் உச்சுகொட்டவைத்து பிரமிக்க வைக்கிறது...உண்மையில் உத்வேகத்தை அளித்துள்ளது என சமந்தா பாராட்டி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X